பொது செய்தி

தமிழ்நாடு

தனிப்பிரிவு அதிகாரிக்கு கொரோனா

Added : செப் 15, 2020
Share
Advertisement

விழுப்புரம்; விழுப்புரம் தனிப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் கொரோனா பாதிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், போலீசார் அச்சமடைந்துள்ளனர்.

விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில், தனிப்பிரிவு போலீஸ் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் உட்பட ஏராளமான போலீசார் பணியில் உள்ளனர். சில தினங்களுக்கு முன் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்திக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.இந்நிலையில், தனிப்பிரிவு போலீஸ் அலுவலகத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்தனர். மேலும், தனிப்பிரிவு அலுவலகத்தில் பணிபுரியும் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.இந்த பரிசோதனை முடிவில் நேற்று முன்தினம் மேலும் ஒரு போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று உறுதியானது.கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அரசு அலுவலர்களை அவர்களது வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் பணிக்கு வந்துள்ளார். அவர், எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள தனது அறையில் கடந்த இரண்டு நாட்களாக தனிமைப்படுத்திக்கொண்டு வழக்கமான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.தனிப்பிரிவு அலுவலகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், எஸ்.பி., அலுவலகத்தில் பணிபுரியும் போலீசார் மற்றும் பணியாளர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X