மாணவர்களுக்கு சத்துணவு வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு சத்துணவு வழங்கல்

Added : செப் 15, 2020
Share

திண்டிவனம்; திண்டிவனம் குஷால்சந்த் மேல்நிலைப்பள்ளியில், தமிழக அரசின் உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் செயல்படாமல் உள்ளன. இதையொட்டி பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதற்கு பதிலாக, உலர் உணவு பொருட்கள் வழங்குவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது.இதேபோன்று, திண்டிவனத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் குஷால்சந்த் மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்களான, அரிசி, துவரம் பருப்பு, முட்டை ஆகியவற்றை பள்ளி நிர்வாகி பப்லாசா வழங்கி துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர் அப்பாண்டராஜ், உதவி தலைமையாசிரியை சுஜாதா மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X