சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காஸ் ஏஜன்சி உரிமையாளர் வீட்டில் ரூ.2.41 லட்சம் திருட்டு: போலீஸ் விசாரணை

Added : செப் 15, 2020
Share
Advertisement

திண்டிவனம்; திண்டிவனத்தில் காஸ் ஏஜன்சி உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து, 2.41 லட்சம் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திண்டிவனம் ஜெயபுரம் 2வது தெருவில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வாடகை வீடு எடுத்து வசித்து வருபவர் செந்தில்சங்கர், 49; திண்டிவனம் அடுத்த தென்நெற்குணம் கிராமத்தில் காஸ் ஏஜன்சி வைத்துள்ளார். இவரது மனைவி கீதா இரண்டு பிள்ளைகளுடன் சென்னை, ஆலந்துாரில் வசித்து வருகின்றனர்.இந்நிலையில், செந்தில்சங்கர் தனது குடும்பத்தினருடன் ஒரு வாரத்திற்கு முன் கோவில்பட்டியில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றிருந்தார். ஜெயபுரம் அபார்ட்மென்ட் வீட்டின் சாவி காஸ் ஏஜன்சியில் பணிபுரியும் கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ், 29; என்பவரிடம் உள்ளது.இவர் தினமும் ஏஜன்சியில் கலெக் ஷன் ஆகும் பணத்தைக் கொண்டு வந்து வீட்டில் பீரோவில் வைத்து விட்டு மறுநாள் வங்கியில் செலுத்த எடுத்துச் செல்வது வழக்கம்.இந்நிலையில், நேற்று காலை, செந்தில்சங்கர் வீட்டில் வைத்த பணத்தை வங்கியில் செலுத்த, பணத்தை எடுக்க சுந்தராஜ் சென்றுள்ளார். அப்போது, வீட்டின் வெளிப்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது.இதுகுறித்து அவர், செந்தில்சங்கருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், வீட்டின் உள்ளே சுந்தர்ராஜ் சென்று பார்த்தபோது, முதல் நாள் பீரோவில் வைத்த 2 லட்சத்து 41 ஆயிரத்து 600 ரூபாய் திருடு போயிருப்பது தெரியவந்தது.தகவல் அறிந்த டி.எஸ்.பி., கணேசன், திண்டிவனம் டவுன் இன்ஸ்பெக்டர் மூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் தமிழ்மணி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.மேலும், அப்பார்ட்மென்டில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X