பா.ஜ., கொடிக் கம்பம் வைக்க எதிர்ப்பு போலீசாருடன் கட்சியினர் வாக்குவாதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., கொடிக் கம்பம் வைக்க எதிர்ப்பு போலீசாருடன் கட்சியினர் வாக்குவாதம்

Added : செப் 15, 2020
Share

திண்டிவனம்; திண்டிவனம் அருகே சாரம் பி.டி.ஓ., அலுவலகம் எதிரே பா.ஜ., கொடிக்கம்பம் வைப்பதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததால் கட்சியினர் வாக்குவாதத்தில்ஈடுபட்டனர்.

பிரதமர் மோடியின் 70வது பிறந்த நாளையொட்டி திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 12 இடங்களில், கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக திண்டிவனம், சாரம் பி.டி.ஓ., அலுவலகம் எதிரில், கொடிக் கம்பத்திற்கான பீடம் அமைக்கப்பட்டது.தகவலறிந்த ஒலக்கூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து வந்து, அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்ப பீடத்தை அப்புறப்படுத்துமாறு பா.ஜ., நிர்வாகிகளிடம் தெரிவித்தனர். இதற்கு பா.ஜ., மாவட்ட தலைவர் கலவரதன், பொதுச் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, போலீசாரும்,வருவாய்த் துறையினரும் அங்கிருந்து சென்றனர்.இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X