சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தடையை மீறி ஆர்ப்பாட்டம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

விழுப்புரம்; பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மத்திய மாவட்ட தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் 60 பேரை போலீசார் கைது செய்தனர்.குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் பிரதமரின் கிசான் திட்ட நிதி முறைகேடுகளை கண்டிப்பது. இதற்கு காரணமான வேளாண்மை துறை அதிகாரிகள், இடைத்தரகர்களை கைது செய்ய வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே மத்திய மாவட்ட தி.மு.க., தலைமையில் கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.தி.மு.க., மாவட்ட அவைத் தலைவர் புகழேந்தி தலைமை தாங்கினார். பொருளாளர் ஜனகராஜ், துணைச் செயலாளர்கள் புஷ்பராஜ், ஜெயச்சந்திரன், மைதிலி ராஜேந்திரன், காங்., மாவட்ட தலைவர்கள் சீனுவாசகுமார், ரமேஷ், இந்திய கம்யூ., செயலாளர் சரவணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமீர்அப்பாஸ், வி.சி., ஆற்றலரசு முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய செயலாளர் ராஜா, நகர இளைஞரணி மணிகண்டன், மாணவரணி அமைப்பாளர் ஸ்ரீவினோத், நகர செயலாளர் சக்கரை, பொறியாளர் அணி இளங்கோ, துணைச் செயலாளர் புருஷோத்தமன் உட்பட பலர் பங்கேற்றனர்.தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை ஏ.டி.எஸ்.பி., தேவநாதன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X