பொது செய்தி

தமிழ்நாடு

பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

விழுப்புரம்; விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர குறை கேட்பு நாள் கூட்டத்தில் நேற்று 152 மனுக்கள் பெறப்பட்டன.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி, மனுக்களைப் பெற்றார்.கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ஸ்ரேயா பி சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் மகேந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அம்புரோஸியா நேவிஸ்மேரி, உதவிஆணையர் (கலால்) மோகன், மாவட்டஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சண்முகசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.முதியோர் ஓய்வூதியம், கல்வி கடன், வீட்டு மனைப்பட்டா, பசுமை வீடுகள், ரேஷன் கார்டு, பட்டா மாற்றம் கோரி 152 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை மேல் நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X