இந்தியா

போலி ஆவணங்கள் கொடுத்தால் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Added : செப் 15, 2020
Share
Advertisement

புதுச்சேரி; சென்டாக் கவுன்சிலிங்கில் போலி ஆவணங்களை சமர்பிக்கும் மாணவர்கள்,அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி மாணவர் பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

உயர் கல்வித் துறை செயலருக்கு சங்க தலைவர் பாலா அனுப்பிய மனு:புதுச்சேரி மாநிலத்தில் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த படிப்பிற்கான ஆன் லைன் கலந்தாய்வினை உடனே நடத்த வேண்டும். வருவாய்த் துறையினர் கொரோனா தொற்று பணிகளை செய்வதால், வருவாய், ஜாதி மற்றும் குடியிருப்பு சான்றிதழ்களை மாணவர்கள் விரைவாக பெற முடியவில்லை.எனவே பிற துறைகளிலிருந்து வருவாய்த்துறைக்கு கூடுதல் அலுவலர்களை நியமித்து மாணவர்களுக்கு சான்றிதழ்களை விரைவாக வழங்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் சிலர் போலி ஆவணங்கள் மூலம் இருப்பிட சான்றிதழ் பெற்று, மருத்துவ கல்லுாரிகளில் சேர்க்கைப் பெற்றனர். இது தொடர்பாக பல வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளன.எனவே, மாணவர் சேர்க்கையின் போது அனைத்து ஆவணங்களையும் சென்டாக் நிர்வாகம் மிகுந்த கவனத்தோடு, சரி பார்க்க வேண்டும். போலி ஆவணங்கள் அடிப்படையில் விண்ணப்பிக்கும் பெற்றோர், மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்வோர் மீதும் குற்ற வழக்குகள் பதிந்து கடுமையான தண்டனையை விதிக்க வேண்டும்.புதுச்சேரி மாநில மாணவர்களுக்கான உயர் கல்வி இடங்களை பிற மாநில மாணவர்கள் குறுக்கு வழியில் சேர அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X