இந்தியா

மகன் சாவில் சந்தேகம் தந்தை போலீசில் புகார்

Added : செப் 15, 2020
Share
Advertisement

புதுச்சேரி; முத்தியால்பேட்டையில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் மகன் சாவில் சந்தேகம் உள்ளது என அவரது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

புதுச்சேரி கதிர்காமம், ஆனந்தா நகர், கல்யாணசுந்தரம் வீதியைச் சேர்ந்தவர் உதயன், 30. இவரது மனைவி சிவசுந்தரி. பி.காம் பட்டதாரியான உதயன், சாரம் ஞானபிரகாம் நகர், வெள்ளாளர் வீதி, லாஸ்பேட்டை இ.சி.ஆர். சாலை பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வந்தார்.இ.சி.ஆர். சாலை பியூட்டி பார்லரில் வேலை செய்த கிருமாம்பாக்கத்தைச் சேர்ந்த விசித்ரா என்பவருடன் உதயனுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவரை முத்தியால்பேட்டை செந்தாமரை நகர், காமராஜர் வீதியில் வாடகை வீடு எடுத்து தங்க வைத்தார். இதனால் சொந்த வீட்டிற்கு வராமல், உதயன் முத்தியால்பேட்டை விசித்ரா வீட்டிலே தங்கியிருந்தார். இதை அவரது தந்தை நடராஜன் கண்டித்துள்ளார்.இந்நிலையில், கடந்த 13ம் தேதி, உதயன் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நடராஜன் குடும்பத்திற்கு விசித்ரா தகவல் தெரிவித்தார். அரசு மருத்துவ மனைக்கு வந்த நடராஜன், விசித்தராவிடம் விசாரித்தபோது, 13ம் தேதி நள்ளிரவு குடிபோதையில் வந்த உதயன், தன்னை உறவுக்கு அழைத்தாகவும், அப்போது, தான் கர்ப்பமாக இருப்பாதால், தன்னால் வர முடியாது என தெரிவித்துள்ளார்.இதனால் தனது அறைக்கு சென்று கதவை பூட்டி கொண்டுள்ளார். அதிகாலையில் அறை கதவை திறந்து பார்த்தபோது, உதயன் துாக்கில் தொங்கியதாகவும், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, தனது மகன் சாவில் சந்தேகம் உள்ளது என நடராஜன் கொடுத்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X