இந்தியா

மதிய உணவுக்கு பதிலாக, அரிசி, பணம் இன்று முதல் வழங்கப்படும்: அமைச்சர்

Added : செப் 15, 2020
Share
Advertisement

புதுச்சேரி; புதுச்சேரி மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பதில், அரிசி, ரொக்கப் பணம் இன்று 15ம் தேதி முதல் வழங்கப்படும் என அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:கொரோனா தொற்று நோய் காரணமாக அனைத்து பள்ளிகளும் முடியுள்ளதால், புதுச்சேரி, காரைக்கால், மாஹி மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு அரசு மூலம் மதிய உணவு வழங்க முடியவில்லை.இதனால் தேதிய உணவு பாதுகாப்பு சட்டப்படி 1ம் வகுப்பு முதல் 8 வகுப்பு பயிலும் அனைத்து மாணவ -மாணவிகளுக்கும் சமைத்த உணவிற்குப் பதிலாக உணவு தானியங்கள் மற்றும் சமைப்பதற்கு ஏற்படும் செலவுகளுக்கு, முதல் தவணையாக அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும்.ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, ரூ. 290 ; 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 4 கிலோ அரிசி, ரூ. 390 வழங்கப்படும்.இன்று 15 ம்தேதி காலையில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும், மாலையில் இரண்டாம் வகுப்பிற்கும் இலவச அரசி, ரொக்கப் பணம் வழங்கப்படும். நாளை 16ம் தேதி காலையில் 3 வகுப்பு மாணவர்களுக்கும், மாலையில் 4ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும்.மேலும் 17 ம்தேதி காலையில் 5ம் வகுப்பு, மாலையில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அரிசி,பணம் வினியோகம் செய்யப்படும். 18 ம்தேதி காலை 7 ம் வகுப்பு மாணவர்கள், மாலையில் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கப்படும்.அரசு பள்ளிகளில் 2019--20 கல்வி ஆண்டில் 1 முதல் 8 ம் வகுப்பு வரை படித்த மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள், காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் ,மாலை 2 மணி முதல் 4 மணி வரையிலும் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று உணவு பாதுகாப்பு படியின் முதல் தவணையை ரேஷன்கார்டு, ஆதார் அட்டை போன்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டையைக் காண்பித்து பெற்றுக்கொள்ளலாம்.மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை வளர்க்க, பள்ளி நுாலகங்களில் உள்ள புத்தகங்கள் மாணவர்களுக்குக் கடனாக வழங்கப்படும். மாணவர்கள் அந்த புத்தகங்களைப் படித்து அவற்றில் ஒன்று அல்லது இரண்டு பக்க மதிப்புரைகளைபெற்றோர்களின் உதவியுடன் எழுதி பள்ளிகள் திறந்த பின் சமர்ப்பிக்கலாம். ஒவ்வொரு பள்ளியில் சமர்ப்பிக்கப்பட்ட சிறந்த 3 மதிப்புரைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X