இந்தியா

ஒரே நாளில் 414 பேருக்கு கொரோனா; 9 பேர் சிகிச்சை பலனின்றி இறப்பு

Added : செப் 15, 2020
Share
Advertisement

புதுச்சேரி; புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் 414 பேருக்கு கொரோனா உறுதியானது. 9 பேர் உயிரிழந்தனர். புதுச்சேரியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் காலை 10:00 மணி முதல் நேற்று காலை 10:00 மணி வரை, புதுச்சேரியில் 3742 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.இதில், 414 பேருக்கு தொற்று உறுதியானது. இதில், புதுச்சேரியில் 308 பேர், காரைக்காலில் 74 பேர், ஏனாமில் 29 பேர், மாகியில் 3 பேர் அடங்குவர். மருத்துவமனைகளில் 1721 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். லேசான அறிகுறியுடன் 3084 பேர் வீடுகளில் தனிமையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 447 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இது வரை 15 ஆயிரத்து 27 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 9 பேர் இறப்புபுதுச்சேரி ரெயின்போ நகர் 4வது குறுக்கு தெருவைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி, அரியாங்குப்பம், ஆர்.கே. நகர், அய்யனார் கோவில் வீதியைச் சேர்ந்த 63 வயது பெண், வில்லியனுார் கிழக்கு தேரோடும் வீதியைச் சேர்ந்த 56 வயது ஆண், அன்னை தெரேசா நகரில் 59 வயதுஆண், கதிர்காமம், ராதாகிருஷ்ணன் நகரில் 74 வயது பெண் இறந்தனர்.மேலும் லாஸ்பேட்டை, காமராஜர் வீதியைச் சேர்ந்த 47 வயது ஆண், வில்லியனுார் வீரசிவாஜி நகரில் 65 வயது ஆண், சித்தன்குடியைச் சேர்ந்த 52 வயது ஆண், காரைக்காலைச் சேர்ந்த 75 வயது பெண் உட்பட 9 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தனர். இது வரை 394 பேர் இறந்துள்ளனர். உயிரிழப்பு சதவீதம் 1.95 ஆக உயர்ந்தது.1 லட்சம் கடந்த பரிசோதனைகொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய விஞ்ஞானிகள் குழு அளித்த பரிந்துரைப்படி, பரிசோதனைகள் பரவலாக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சிறப்பு முகாம்கள் மூலமும், வீடு விடாகவும் சென்று கொரோனா பரிசோதனை நடக்கிறது. மார்ச் மாதத்தில் இருந்து இது வரை ஒரு லட்சத்து 3,743 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். மற்றும் ரேபிட் ஆண்டிஜன் டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. இதில், 80 ஆயிரத்து 424 பேருக்கு தொற்று இல்லை. 20 ஆயிரத்து 226 பேருக்கு தொற்று உறுதியானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X