இந்தியா

தீவிர வரி வசூல் சிறப்பு முகாம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

திருக்கனுார்; மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் திருக்கனுாரில் நடந்த தீவிர வரி வசூல் சிறப்பு முகாமை ஆணையர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார். மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட திருக்கனுாரில் நேற்று நடந்த தீவிர வரி வசூல் முகாமை ஆணையர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார். உதவி பொறியாளர் நாகராஜன் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர். ஆணையர் ஜெயக்குமார் கூறுகையில், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 18 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள 42 கிராமங்களிலும் சிறப்பு வரிவசூல் செய்ய 10 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், இரண்டு கிராம பஞ்சாயத்துகளுக்கு ஒரு குழு வீதம் 9 குழுக்கள் வீடு வீடாக சென்று வீட்டு வரி, குடிநீர் வரி கட்டணத்திற்கான நோட்டீஸ் வழங்கி, வரி வசூல் செய்தல், புதிய வீடுகளுக்கான கட்டட வரி மதிப்பீடு தயார் செய்தல், வணிக உரிமங்கள் வழங்க விண்ணப்பம் பெறுதல் போன்ற பணிகளை மேற்கொள்வர்.வணிக உரிமங்களை ஏற்கனவே பெற்று புதுப்பிக்க தவறியவர்கள், இந்த சிறப்பு வரி வசூல் முகாம்களில் உரிம கட்டணம் செலுத்தலாம். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு குழு அனைத்து தொழிற்சாலைகளிலும் கூடுதலாக கட்டியுள்ள கட்டடங்களுக்கான வரி கட்டண மதிப்பீடுகளை தயார் செய்யும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வீட்டிற்கான வரி, குடிநீர் கட்டணம் ஆகியவற்றை உடனடியாக செலுத்தி கொம்யூன் பஞ்சாயத்தின் வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.இந்த, சிறப்பு வரி வசூல் முகாம்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்கள் தவிர சனிக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் செயல்படும்.இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X