இந்தியா

பாகூரில் வீட்டின் தோட்டத்தில் 23 நாக பாம்பு குட்டிகள் பிடிபட்டன

Added : செப் 15, 2020
Share
Advertisement
 பாகூரில் வீட்டின் தோட்டத்தில்  23 நாக பாம்பு குட்டிகள் பிடிபட்டன

பாகூர்: பாகூரில் வீட்டின் தோட்டத்தில் பதுங்கி இருந்த 23 நாகபாம்பு குட்டிகள் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாகூர் பங்களா வீதியை சேர்ந்தவர் புவியரசன் 29; கொத்தனார். இவர் நேற்று காலை தனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு இரண்டு நாகப்பாம்புகள் குட்டிகள் ஊர்ந்து சென்றதை கண்டுள்ளார். உடனே, அதே பகுதியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் தன்னார்வலரான விக்கி என்பவருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த விக்கி, இரண்டு நாகப்பாம்பு குட்டிகளையும் பிடித்து ஒரு டப்பாவில் அடைத்தார். பிடிபட்ட பாம்பு குட்டிகள் ஒரே அளவில் இருந்ததால், மேலும் பாம்புகள் இருக்கூடும் என சந்தேகமடைந்த விக்கி, அப்பகுதியில் சோதனை செய்து பார்த்தார்.அப்போது, வீட்டின் பின்பகுதி வாசல் படிக்கட்டு இடுக்கு பகுதியில் ஏராளமான நாகப் பாம்பு குட்டிகள் இருந்தன. ஒவ்வொன்றாக 23 நாகப்பாம்பு குட்டிகளையும் லாவகமாக பிடித்து, டப்பாவில் அடைத்தார். இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்து, அங்கு வந்த வனத்துறை ஊழியர்களிடம், நாகபாம்பு குட்டிகளை விக்கி ஒப்படைத்தார். அச்சமின்றி பாம்புகளை பிடித்த விக்கிக்கு, அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர். பாகூரில் ஒரே நேரத்தில் 23 நாகபாம்பு குட்டிகள் பிடிபட்ட சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X