இந்தியா

இளம் வக்கீல்களுக்கு ஊக்கத் தொகை: பா.ஜ., தலைவர் சாமிநாதன் உறுதி

Added : செப் 15, 2020
Share
Advertisement

புதுச்சேரி; 'புதுச்சேரியில் பா.ஜ., ஆட்சி மலரும்போது, அனைத்து இளம் வழக்கறிஞர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்கப்படும்' என, மாநில பா.ஜ., தலைவர் சாமிநாதன் பேசினார்.

பா.ஜ., வழக்கறிஞர்கள் அணியின் மாநில இணை அமைப்பாளர்களாக தேவேந்திரன், சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்களாக திலகவதி, விஜயபரதன், கலைச் செல்வம், கருணாகரன், விக்டர் சந்திரமோகன், மாவட்ட அமைப்பாளர்களாக முத்துக் குமரன், ஜெயபால், கிருஷ்ணராஜ், காரைக்கால் மாவட்ட அமைப்பாளராக மகாலட்சுமி, தொகுதி அமைப்பாளர்களாக பிரகாஷ், லாஸ்பேட்டை கார்த்திக், அசோக்குமார், புவனேஸ்வரி, மகாலட்சுமி, சுகுமாரன், தர்மலிங்கம், நாராயணன், சிவக்குமார், வெற்றிவேல், தொகுதி இணை அமைப்பாளர்களாக செல்வம், ஆதி நாராயணன், பாலமுருகன் உள்ளிட்டோரை, பா.ஜ., வழக்கறிஞர்கள் அணியின் மாநில அமைப்பாளர் கார்த்திகேயன் நியமித்துள்ளார்.வழக்கறிஞர்கள் அணிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு நியமன ஆணை வழங்கும் விழா பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. வழக்கறிஞர் அணியின் அமைப்பாளர் கார்த்திகேயன், நகர மாவட்ட தலைவர் அசோக்பாபு முன்னிலையில் நியமன ஆணைகளை, மாநில பா.ஜ., தலைவர் சாமிநாதன் வழங்கினார்.விழாவில் சாமிநாதன் பேசும்போது, 'ஐகோர்ட்டில் வழக்கு தொடர வேண்டும் என்றால் புதுச்சேரி மக்கள் சென்னைக்கு செல்ல வேண்டி உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் 2021ம் ஆண்டில் பா.ஜ., ஆட்சி மலரும்போது, சென்னை ஐகோர்ட் கிளையை புதுச்சேரியில் அமைக்க மத்திய சட்ட அமைச்சருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.அனைத்து இளம் வழக்கறிஞர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்கவும், அனைத்து வழக்கறிஞர்களுக்கும் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பா.ஜ., சார்பில் இலவச சட்ட ஆலோசனை மையங்களை அமைத்து, ஏழை எளிய மக்களுக்கு சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும்' என்றார். பொதுச் செயலாளர்கள் ஏம்பலம் செல்வம், மோகன்குமார், துணைத் தலைவர்கள் தங்கவிக்கிரமன், செல்வம், ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் இளங்கோவன், மாவட்டத் தலைவர்கள் தெய்வசிகாமணி, ஆனந்தன், நாகேஸ்வரன் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X