இந்தியா

நளன் குளத்தில் தண்ணீர் இல்லாததால்

Added : செப் 15, 2020
Share
Advertisement

காரைக்கால்; திருநள்ளாறு நளன் குளத்தில் தண்ணீர் இல்லாத நிலையில் பக்தர்கள் தங்கள் துணிகளை குளக்கரையில் விட்டுச் செல்கின்றனர்.காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். சனி பரிகார தலமான இக்கோவிலுக்கு பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். நளன் குளத்தில் நீராடும் பக்தர்கள், அணிந்திருக்கும் உடைகளை குளத்தில் விட்டுச் செல்வது வழக்கம்.கொரோனா ஊரடங்கால் கோவில் மூடியுள்ளதால், நளன் குளத்தில் குளிக்க அரசு தடை விதித்தது. குளத்திலிருந்த தண்ணீரும் வெளியேற்றப்பட்டது.தற்போது ஊரடங்கு தளர்வில் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். நளன் குளத்தில் நீராடும் அளவிற்கு தண்ணீர் இல்லாததால், தண்ணீரை தலையில் தெளித்துக் கொண்டு, அவர்கள் அணிந்திருந்த உடைகளை குளக்கரையில் விட்டுச் செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X