தடையை மீறி போராட்டம் வியாபாரிகள் மீது வழக்கு | Dinamalar

இந்தியா

தடையை மீறி போராட்டம் வியாபாரிகள் மீது வழக்கு

Added : செப் 15, 2020
Share

புதுச்சேரி; தடை உத்தரவை மீறி போராட்டம் நடத்திய சண்டே மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் மீது போலீசார்வழக்கு பதிவு செய்தனர்.புதுச்சேரி ஏ.ஐ.டி.யூ.சி. சண்டே மார்கெட் வியாபாரிகள் சங்கத்தினர், சண்டே மார்கெட் கடைகள் திறக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் காந்தி வீதியில், துணிக்கடை அமைத்து நுாதன போராட்டம் நடத்தினர்.கொரோனா ஊரடங்கு காலத்தில், தடை உத்தரவை மீறி போராட்டம் நடத்தியது, சமூக இடைவெளி இன்றி, நோய் தொற்று பரப்பும் வகையில் செயல்பட்டதாக ஏ.ஐ.டி.யூ.சி., பொதுச்செயலாளர்சேது செல்வம், சங்க தலைவர் துரை செல்வம், நிர்வாகிகள் டோனி,பரமசிவம் மீது பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X