இந்தியா

துணைத் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் ஹால் டிக்கெட் பெறலாம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

புதுச்சேரி; பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தேர்விற்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் ஹால்டிக்கெட்களை இன்று முதல் இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பள்ளி கல்வித் துறை துணை இயக்குனர் மைக்கேல் பென்னோ விடுத்துள்ள செய்திக்குறிப்பு:வரும் செப்டம்பர், அக்டோபர் 2020, பிளஸ்1,பிளஸ் 2 துணைத் தேர்வெழுத விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உட்பட) ஹால்டிக்கெட்டுகளை இன்று 15ம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.எழுத்து தேர்வெழுதி, எழுத்து தேர்வு மற்றும் அகமதிப்பீடு ஆகிய இரண்டிலும் சேர்த்து 35 அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்று, செய்முறைத் தேர்வில் பங்கேற்காத காரணத்தால் தேர்ச்சி பெறாதவர்கள், தற்போது செய்முறைத் தேர்வில் மட்டும் பங்கேற்க வேண்டும். அவ்வகை தேர்வர்கள் மீண்டும் எழுத்துத் தேர்வு எழுத வேண்டாம்.ஏற்கனவே செய்முறைத் தேர்வில் பங்கேற்காமல், எழுத்து தேர்வு மற்றும் அகமதிப்பீடு ஆகிய இரண்டிலும் சேர்த்து 35 மதிப்பெண்ணுக்கும் குறைவாக பெற்று தேர்ச்சி பெறாதவர்கள் தற்போது எழுத்து, செய்முறைத் தேர்வுகளை கட்டாயம் எழுத வேண்டும்.செய்முறைத் தேர்வு செய்ய வேண்டிய தனித்தேர்வர்கள், கருத்தியல் தேர்வு (Theory Exam) நடக்கும் நாட்களுக்கு முன்னரே தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி செய்முறைத் தேர்வு நடக்கும் தேதி குறித்த விவரத்தை அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு இல்லாமல் யாரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.செப்டம்பர், அக்டோபர் 2020 மேல்நிலை பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 துணைத் தேர்வுகளுக்கான அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X