இந்தியா

ஏனாம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு

Added : செப் 15, 2020
Share
Advertisement

புதுச்சேரி; ஏனாம் அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளின் அவசர சூழ்நிலையை எதிர்கொள்ள 11 வெண்டிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.புதுச்சேரி பிராந்தியம் மட்டுமின்றி ஏனாம் பிராந்தியத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இது வரை 1306 பேர் பாதித்து, 34 பேர் இறந்துள்ளனர். இதனால் ஏனாம் அரசு பொது மருத்துவ மனைக்கு 11 வெண்டிலேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.இதனை சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கருவி செயல்படும் விதம் குறித்து கேட்டறிந்தார்.ஏனாமில் தற்போது கொரோனா தொற்றினால், மருத்துவமனையில் 203 பேரும், வீடுகளில் 120 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். இது வரை 949 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். அதற்கான மண்டல நிர்வாகி மற்றும் அரசு பொது மருத்துவமனை டாக்டர்களை அமைச்சர் பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X