இந்தியா

கிரிக்கெட் வீரர்களுக்கு நாளை தேர்வு முகாம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

புதுச்சேரி; புதுச்சேரியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கிரிக்கெட் தேர்வு முகாம் நாளை துவங்குகிறது. இதுகுறித்து புதுச்சேரி கிரிக்கெட் சங்க செயலாளர் சந்திரன் அறிக்கை:புதுச்சேரியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என பல்வேறு வயதினருக்கான கிரிக்கெட் தேர்வு முகாம் நடக்கிறது. நாளை(16ம் தேதி) காலை 9:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, 16 வயது மற்றும் 19 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு தேர்வு நடக்கிறது. வரும் 17ம் தேதி 19, 23 வயதிற்குட்பட்ட பெண்கள் மற்றும் 23 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான தேர்வு நடக்கிறது. இதேபோல், 18ம் தேதி சீனியர் ஆண்களுக்கான தேர்வு நடக்கிறது. தேர்வு முகாமில் கலந்து கொள்பவர்கள் புதுச்சேரி மாநிலத்தில் பிறந்தவர்கள் அல்லது ஒரு வருடத்திற்கும் மேலாக புதுச்சேரியில் வசிக்கும், பணிபுரியும் விளையாட்டு வீரர்களாக இருக்க வேண்டும். தேர்வு சோதனைக்கு வருவோர், CAP வலைதளமான www.cap-cricket.com ஆன் லைனில் புதிய பதிவு, புதுப்பித்தல் வேண்டும். மேலும், தேர்வு தேதிக்கு ஒருநாள் முன்னதாக மருத்துவரிடம் இருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இதுதொடர்பான விவரங்களுக்கு வாசன் ராஜ் - 80723 26831, சுப்ரமணியன்- 95666 96665, வேல்முருகன்- 97918 01215 ஆகியோர் மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X