பொது செய்தி

தமிழ்நாடு

மூலிகை தோட்டத்தால் பசுமையான பள்ளி வளாகம்; சுற்றுச்சூழலை காக்க மாணவர்களுக்கு வழிகாட்டுகிறது

Added : செப் 15, 2020
Share
Advertisement
 மூலிகை தோட்டத்தால்  பசுமையான பள்ளி வளாகம்; சுற்றுச்சூழலை காக்க மாணவர்களுக்கு வழிகாட்டுகிறது

தேனி : மூலிகை தோட்டத்தால் வளாகத்தை பசுமையாக்கி அதன் வளர்ப்பின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விளக்கி சுற்றுச்சூழலை பேணிக்காக்க வலியுறுத்துகிறது தேனி அருகேயுள்ள பழனிச்செட்டிப்பட்டி பழனியப்பா மேல்நிலைப்பள்ளி.

இப்பள்ளியில் 1190 மாணவர்கள் படிக்கின்றனர். மைதானத்தில் வேம்பு, புங்கை, ஆலமரம் என 100 மரங்கள் நிழல் தருகின்றன. மூலிகைத்தோட்டத்தில் துளசி, பிரண்டை, துாதுவளை, கீழாநெல்லி, மருதாணி, சிரியாநங்கை, சோற்றுக் கற்றாழை, கல்லுறுக்கி என 23க்கும் மேற்பட்ட மூலிகைச்செடிகள் பராமரிக்கப்படுகின்றன. அறிவியல் ஆசிரியர் வெங்கடேசன் மூலிகைகளின் பயன்கள் குறித்தும் மாணவர்களுக்கு கற்பித்துள்ளார். அவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன.

விழிப்புணர்வு

ஜெ.பானுரேகா, ஒருங்கிணைப்பாளர், பசுமைப்படை: சூழல் பாதுகாப்பு, இயற்கையை பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விளக்குகிறோம். இதனால் அவர்கள் மூலிகைப் பயன்கள், அதன் பாரம்பரிய பண்புகள் குறித்து அறிகின்றனர். தற்போது சிறுநீரகம், பித்தப்பை கல்லடைப்பு நோய்கள் வருகின்றன. அதற்கு 'கல்லுறுக்கி' இலை அரிய மருந்து என்பதை மாணவர்களுக்கு அறிவியல் பூர்வமாக விளக்கி உள்ளோம்.

அதன் பயன்கள் குறித்து உறவினர்கள், பெற்றோர்களிடம் எடுத்துக்கூறி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். விடுமுறை நாட்களிலும் வந்து தண்ணீர், ஊற்றி பராமரிக்கின்றனர்.

சூழல் பாதுகாப்பு

வி.ஆண்டாள், தலைமை ஆசிரியை: ''பிளாஸ்டிக்' இல்லா பள்ளி வளாகம் என்பதே எங்கள் இலக்கு. சத்துணவுக்கான முக்கால் கிலோ காய்கறிகள் காய்கறி தோட்டத்தில் இருந்து கிடைக்கிறது. இங்கிருந்து வெளியே செல்லும் மாணவர்கள் 'சூழல் பாதுகாப்பை' நன்கு உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே பள்ளியின் நோக்கம். 'பிளாஸ்டிக்' பாட்டில்கள் பயன்படுத்தாமல் இருப்பது குறித்தும், அதனால் 'கேன்சர்' உண்டாவது, மண்ணில் தேங்கும் பிளாஸ்டிக் குப்பையால் பல்லுயிர் பெருக்கம் குறைந்து வருவதன் ஆபத்து குறித்தும் விளக்கி வருகிறோம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X