பொது செய்தி

தமிழ்நாடு

சமூக சமையலறையில் கூடுதல் செலவு; தேனி ஒன்றிய கூட்டத்தில் புகார்

Added : செப் 15, 2020
Share
Advertisement

தேனி : ''கொரோனா காலத்தில் சமூக சமையலறை உணவு செலவு கூடுதலாக உள்ளது,'' என, தேனி ஒன்றிய கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் சங்கீதா புகார் கூறினார்.

தேனி ஒன்றிய கூட்டம் தலைவர் சக்கரவர்த்தி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் முருகன், பி.டி.ஓ., ஜெகதீஷ் சந்திரபோஸ் முன்னிலை வகித்தனர். கவுன்சில் நடக்கும் போது அலுவலர்களும் கூட்டத்திற்கு வர வேண்டும். கவுன்சிலரின் கேள்விகளுக்கு விளக்கம் தர வேண்டும். கணக்கு விபரம் தாக்கல் செய்ய வேண்டும் என தலைவர் பேசினார்.

அதன்பின் கூட்ட அரங்கிற்கு அலுவலர்கள் சிலர் வந்தனர்.'தலைவர் வார்டுக்கு ரூ.12 லட்சத்திற்கு வேலை ஒதுக்கீடு செய்கிறீர்கள். மற்றவர்களுக்கு குறைவாக ஒதுக்கப்படுகிறது. எல்லா வார்டுக்கும் பணி ஒதுக்க வேண்டும். சில பணிகளுக்கான டெண்டரை ஏன் தள்ளிவைத்தீர்கள். டெண்டர் நோட்டீஸ் தர வேண்டும்,' என, அ.தி.மு.க., கவுன்சிலர் சங்கீதா வலியுறுத்தினார்.

நான் காரணமல்ல

'டெண்டர் தள்ளிவைக்க பி.டி.ஓ. தான் காரணம். எனது வார்டுக்கு அதிக நிதி ஒதுக்க நான் வலியுறுத்துவது இல்லை. பணிக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு அதிகாரிகள் செய்தனர். நாங்களும் மக்கள் பணிதான் செய்கிறோம். எதையும் எதிர்பார்த்து பதவிக்கு வரவில்லை,' என தலைவர் கூறினார்.'நிர்வாக காரணங்களால் டெண்டர் ஒத்தி வைக்கப்பட்டது.

கவுன்சிலர்களுக்கு டெண்டர் நோட்டீஸ் வழங்குவது இல்லை. இனி வழங்கப்படும். கொரோனா காரணமாக சமூக சமையலறை மூலம் அரண்மணைபுதுார், கொடுவிலார்பட்டியில் மூன்று வேளையும் ஆதரவற்றோருக்கு உணவு சமைத்து வழங்கப்பட்டது,' என பி.டி.ஓ., தெரிவித்தார். அதில் உணவு செலவு கூடுதலாக உள்ளதாக கவுன்சிலர் சங்கீதா புகார் கூறினார். வளர்ச்சிப்பணிகள் உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X