தமிழ்நாடு

நீரில்லை; 50 சதவீத குளங்கள் வறண்டுள்ளன; நிலத்தடி நீர் மட்டம் சரிவு

Added : செப் 15, 2020
Share
Advertisement

மாவட்டத்தில் மொத்தம் 9 அணைகள், 2530 குளங்கள் உள்ளன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 230 குளங்களும், மீதமுள்ளவை உள்ளாட்சி மன்றங்களாலும் நிர்வகிக்கப்படுகின்றன. இதில் 1100 க்கும் மேற்பட்ட குளங்கள் ஆக்கிரமிப்புகளால் மாயமாகிவிட்டன.

ஆண்டுச் சராசரி மழை 836 மி.மீ.,ல் 500 மி.மீ., பெய்தாலே குளங்கள், கண்மாய்கள், ஆழ்துளை கிணறுகள் புத்துயிர் பெறும். கடந்தாண்டு பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் உள்ள 637 குளங்களில் 393 ஏக்கர் பரப்பளவில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தனியார் பங்களிப்புடன் 338 குளங்கள் துார்வாரி புதுப்பிக்கப்பட்டன.

நடப்பாண்டில் 60 சதவீதம் குளங்கள், கண்மாய்கள் துார்வாரப்பட்டு உள்ளது. சில நாட்களாக திண்டுக்கல் பகுதியில் மழை பெய்வதால் மலையடிவாரத்தில் உள்ள ஆத்துார், வரதமாநதி, பாலாறு - பொருந்தலாறு அணைகளுக்கு நீர்வரத்து உள்ளது.

இருப்பினும் மாவட்டத்தில் உள்ள பல நீராதாரங்களுக்கான நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் 50 சதவீத குளங்கள் வறண்டு கிடக்கின்றன. பழநி, தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரத்தில் கால்வாய்கள் பராமரிப்பு இன்றி மழைநீர் குடகனாறு வழியாக காவிரியில் கலக்கிறது. இதனால் கிராமப்பகுதி நிலத்தடி நீர் மட்டம் சரிவடைந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X