சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மது விற்ற இருவர் கைது

Added : செப் 15, 2020
Share
Advertisement

உத்தமபாளையம்: கூடலுார் பசும்பொன்நகர் ராஜேந்திரன் 40. காந்திகிராமம் ஜாபர்சாதிக் 25. இவர்கள் அங்கு சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தனர். இருவரையும் உத்தமபாளையம் மது விலக்கு போலீசார் கைது செய்தனர். ஒன்பது மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குழந்தையுடன் தீக்குளிக்க வந்த பெண் கைது

தேனி: பெரியகுளம் பெருமாள்புரத்தை சேர்ந்தவர் ஜெயமணி 20. இவர் 2 வயது பெண் குழந்தையுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். இவர் எடுத்து வந்த பையில் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில் இருந்தது. கணவர் 2ஆண்டுகளுக்கு முன் சீட்டு விளையாட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். குழந்தையுடன் பிழைக்க வழியின்றி சிரமம் அடைந்ததால் அரசு நிவாரணம் வழங்க கோரி தீக்குளிக்க வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். இவரை போலீசார் கைது செய்தனர்.

முதியவர் உயிரிழப்பு

பெரியகுளம்: ஆண்டிபட்டி எட்டப்பராஜபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி 80. லட்சுமிபுரத்தில் குடியிருந்த இவர் மனைவி இறந்ததால் விரக்தியில் இருந்தார். லட்சுமிபுரம் பஸ் நிறுத்தத்தில் இறந்து கிடந்தார். காரணம் குறித்து தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

ஓய்வு பொறியாளர் மாயம்

அல்லிநகரம்: கிருஷ்ணாநகர் 2வது தெரு சுந்தரம் 74. 2005ல் பழனிச்செட்டிபட்டி அரசு போக்குவரத்து பணிமனையில் உதவி பொறியாளராக பணிபுரிந்தார். பின் ஓய்வு பெற்று 1998 முதல் பேச முடியாத நிலையில் இருந்தார். செப்., 2ல் வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தற்கொலை மிரட்டல்

பழனிச்செட்டிபட்டி: கொடுவிலார்பட்டியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது நிலத்தில் வேலி அமைத்தார். அதே பகுதி பிரகாஷ்பாண்டியன் 36, என்பவர் வேலி அமைக்கும் இடத்தின் வழியாக தனது விவசாய நிலத்திற்கு பாதை உள்ளது. அதனால் அமைக்கக்கூடாது' எனக்கூறி மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். பழனிச்செட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

நால்வர் மீது வழக்கு

ஆண்டிபட்டி: ராயவேலுாரை சேர்ந்த கூலி தொழிலாளி சண்முகவேல் 34. மனைவி அழகுசின்னு. இரு குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்னையில் மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். சமாதானம் செய்து அழைத்து வர சென்ற சண்முகவேலை, அழகுசின்னு, உறவினர்கள் தாக்கியதில் காயமடைந்தார். மனைவி, உறவினர்கள் சின்னம்மா, ராமசாமி, சின்னபாண்டி ஆகிய 4 பேர் மீது ராஜதானி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X