ரஷ்ய எதிர்கட்சி தலைவருக்கு விஷம் செலுத்தப்பட்டது உறுதி

Updated : செப் 15, 2020 | Added : செப் 15, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
russian, opposition leader, poison, confirm, german, france, sweden,ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர், விஷம், செலுத்தப்பட்டது, உறுதி, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன், புடின், மறுப்பு

பெர்லின்:ரஷ்ய எதிர்கட்சி தலைவரான, அலெக்சி நவல்னி, கடந்த மாதம், 20ல், திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். உடனடியாக, ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு, விஷம் வைக்கப்பட்டதாக, குற்றச்சாட்டு எழுந்தது. ஒரு வாரம் கோமா நிலையில் இருந்த அலெக்சி, தற்போது குணமடைந்து வருவதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். அவர் தற்போது தானாக சுவாசிக்க முடிகிறது. சுவாசக்கருவிகள் ஏதும் தேவையில்லை என மருத்துவர்கள் கூறினர்

இது குறித்து, ஜெர்மனி ராணுவ பரிசோதனை கூடம், ஆராய்ச்சி மேற்கொண்டது. அதில், அலக்சி நவல்னிக்கு, ரஷ்ய தயாரிப்பான, ‛நோவிசாக்' எனப்படும், விஷம் செலுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. விஷம் செலுத்தப்பட்டதால் அவருடைய ஆரோக்கியம் பலநாட்களுக்கு பாதிக்கப்படக் கூடும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.


latest tamil newsஇது குறித்து, பிரான்ஸ் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளும், பரிசோதனை மேற்கொண்டன. பிரான்ஸ் மற்றும் ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிகளும் அவருக்கு விஷம் செலுத்தப்பட்டதை ஏற்கனவே உறுதி செய்துள்ளனர்.

ஆனால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்கே லவ்ராவ் இருவரும் ஜெர்மனி, மற்றும் பிரான்ஸ் நாட்டு குற்றச்சாட்டுகளையும் லேப் முடிவுகளையும் மறுத்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
15-செப்-202010:43:05 IST Report Abuse
Ramesh R கேடு கேட்ட
Rate this:
Cancel
Madhusoodhana Ramachandran - Chennai,இந்தியா
15-செப்-202010:18:09 IST Report Abuse
Madhusoodhana Ramachandran கம்யூனிஸ்ட் நாடுகளில் கேவலமாக நடக்கிறது. நம் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் உணரட்டும். இந்தியாவிற்கு கம்யூனிசம் எடுப்பது. உலாகில் உள்ள கம்யூனிஸ்ட் நாடுகளில் மக்கள் மாக்களாக நடத்த படுகிறார்கள். யாரவது எதிர்த்து பேசினால் அவர்கள் இருப்பு தெரியாது. நம்நாட்டில் பிரதமரையும் நீதிபதிகளையும் தைரியமாக விமர்சிக்கிறார்கள்.இந்த சுதந்திரத்தை சிலர் தவறாக உபயோகிரார்கள். வாழ்க பாரதம் வளர்க நம்தேசம்.
Rate this:
Cancel
15-செப்-202009:26:33 IST Report Abuse
ஆரூர் ரங் லால் பஹதூருக்கு காங்கிரஸ் ஆட்கள் சோசலிச ரஷ்யா மூலம்😡 செய்தது மறக்குமா? அதற்கு நன்றிக்கடனாக காங். இந்தியா 12 ஆண்டுகள் சோவியத் எடுபிடியாக இருந்தது. சோவியத் ரஷ்ய ஆதரவு வலது கம்மிகளும் காங்கிரசின் கொடுங்கோல் ஆட்சிக்கு கண்மூடித்தனமான ஆதரவு✋ கொடுத்தார்கள். அட கம்யூனிஸ்ட் வடகொரியா அவர்களுக்கு விளம்பர நிதி வாரிக்கொடுத்தது. ஆகமொத்தம் சாஸ்திரியால் என்றோ வல்லரசாகியிருக்க வேண்டிய நாம் கவைக்குதவாத சோசலிசத்தால் பின்தங்கினோமே. 😥
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
15-செப்-202010:44:51 IST Report Abuse
Ramesh Rஇப்படி தப்பு தப்பா சொல்லிட்டு இருந்தால் நானே கேஸ் போடுவேன் . சும்மா பேசுறது எதாவது ஆதாரம் இருக்கா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X