பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...

Added : செப் 15, 2020
Share
Advertisement

பழநியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பழநி: அடிவாரம் கிரிவீதி, சன்னதி வீதிகளில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கடைகள் நிர்ணயித்ததைவிட கூடுதலாக இடஆக்கிரமிப்பு செய்துள்ளன. இது போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதையடுத்து நேற்று ஆர்.டி.ஓ., அசோகன், தாசில்தார் பழனிச்சாமி, நகராட்சி ஆணையர் லட்சுமணன், கோயில் இணைஆணையர் நடராஜன் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.மலை அடிவாரம், அண்ணாசெட்டி மடம் பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளை காலி செய்யும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

மண் அள்ளிய இருவர் கைது

இடையகோட்டை: தாராபுரத்தைச் சேர்ந்த தர்மராஜ் மற்றும் கொத்தயத்தைச் சேர்ந்த பூபதி, அரசு அனுமதியின்றி ஓடைப்பட்டி குளத்தில் கிராவல் மண் அள்ளினர். டிப்பர் லாரியில் ஜவ்வாதுபட்டியில் உள்ள தோட்டத்துக்கு கொண்டு சென்றனர். இடையகோட்டை போலீசார் ஜவ்வாதுபட்டியில் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.

மதுரையில் மறு பிரேத பரிசோதனை

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு கே. உச்சப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன், கள்ளத் தொடர்பில் இருந்த கீதாவின் வீட்டில் துாக்குப் போட்டு இறந்தார். சாவில் மர்மம் இருப்பதாகக்கூறிய உறவினர்கள் மணிகண்டனின் பிரேத பரிசோதனை செய்த உடலை வாங்க மறுத்துவிட்டனர். ரோடு மறியல் நடந்தது. கூடுதல் எஸ்.பி., வெள்ளைச்சாமி கிராமத்தினரிடம் பேசியதால், மதுரையில் மறு பரிசோதனை நடத்த முடிவானது. இதையடுத்து போலீசார் மணிகண்டன் உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

விபத்தில் ஒருவர் பலி

அம்பிளிக்கை: அம்பிளிக்கையைச் சேர்ந்த ராமசாமி 41, இருசக்கர வாகனம் ஒன்றில் ெஹல்மெட் அணியாமல் அதே ஊரில் தாராபுரம் ரோட்டைக் கடக்க முயன்றார். அவருக்குப் பின்னால் திருப்பூரைச் சேர்ந்த நவீன்குமார் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். நவீன்குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அம்பிளிக்கை போலீசார் விசாரிக்கின்றனர்.

மூவர் கைது

வடமதுரை: தென்னம்பட்டியில் முருகன் 53, பாறைப்பட்டி பிரிவில் வேடசந்துார் முருகானந்தம் 50, ஆகியோர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றனர். வடமதுரை போலீசார் இருவரையும் கைது செய்து, 27 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தங்கம்மாபட்டி வண்டி கருப்பணசுவாமி கோயில் பகுதியில் தடையை மீறி லாட்டரிச் சீட்டு விற்ற கருஞ்சின்னானுர் பெருமாள் 45, என்பவரை கைது செய்து ரூ.300 பணம், ரூ.1500 மதிப்பு லாட்டரிச் சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

கடைகள் திறக்காததால் மறியல்

வேடசந்துார்: குருநாதநாயக்கனுார் ஊராட்சி கரட்டுப்பட்டியில் சிலருக்கு கொரோனா அறிகுறிதெரிந்ததால், சிகிச்சைக்கு சென்று திரும்பினர். அதேநேரம் அவ்வூரில் கடைகளை திறக்க சுகாதாரத்துறையினர் அனுமதிக்கவில்லை.இதனால் சிலர் ரெட்டியார்சத்திரம் - கெண்டையகவுண்டனுார் மறியலில் ஈடுபட்டனர். வேடசந்துார்இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் போலீசார், கடைகளை திறக்கநடவடிக்கை எடுப்பதாக கூறியதால் கலைந்து சென்றனர்.

சுய உதவி குழுக்களுக்கு கடன்

நத்தம்: செந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் முகாம் நடந்தது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். ஐந்து குழுக்களை சேர்ந்த பயனாளிகள் முகாமில் பங்கேற்றனர். 60 பயனாளிகளுக்கு ரூ.32.30 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. கள மேலாளர் மணிகண்டன், வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஆரோக்கியசாமி, செயலாளர் அக்பர், ஜெ., பேரவை இணைச் செயலாளர் ஜெயபாலன் பங்கேற்றனர்.

கொரோனா நிவாரணம்

திண்டுக்கல்: கொரோனா ஊரடங்கில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க ரூ.1000 நிவாரணமாக வழங்கப்பட்டது. திண்டுக்கல்லில் நிவாரணம் பெறாத மாற்றுத்திறனாளிகள் உதவி பெற மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை வைத்திருப்பவர்கள், ஆதார், வாக்காளர் அடையாள அட்டையுடன் தங்கள் பகுதி வி.ஏ.ஓ.,விடம் நேரில் வந்து உதவித்தொகையை பெறலாம். நவம்பர் முதல் வாரம் வரை மட்டுமே நிவாரணம் வழங்கப்படும்.

ரத்த தான முகாம்

திண்டுக்கல்: காந்திஜி நகர் குடியிருப்போர் நலச்சங்கம், மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் ரத்ததான முகாம் கூட்டுறவு நகர் ரோட்டரி பிளாசம் மையத்தில் நடந்தது. ஊராட்சி துணைத் தலைவர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார். மிட்டவுன் சங்க தலைவர் கஜேந்திரன், குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ரவிசங்கர், செயலாளர் சுரேஷ், பொருளாளர் சுஜாதா, மிட்டவுன் சங்க ரத்ததான பிரிவு தலைவர் பாஸ்கரன், ரத்தவங்கி நிர்வாக இயக்குனர் இளங்கோவன் பங்கேற்றனர்.

வாலிபர் தற்கொலை

பழநி: பழநி, கோதைமங்கலம் அருகே சின்னாரவலசு கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் சதீஸ்குமார் 22. இவரின் சகோதரிக்கு கொரோனா தொற்று எற்பட்டது. இதனால் சதீஷ்குமார் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

நால்வர் கைது

சின்னாளபட்டி: செட்டியபட்டியைச் சேர்ந்த பைனான்ஸ் ஊழியர் கருப்பசாமி 38. திருமணமானவர். இதே ஊரைச்சேர்ந்த கல்லுாரி மாணவியுடன் மாயமானதால் கருப்பசாமியின் வீட்டுக்கு சிலர் தீ வைத்தனர். டி.எஸ்.பி., வினோத் தலைமையில் போலீசார், மாணவியை சாயல்குடி அருகே மீட்டனர். தீ வைத்ததாக பாண்டி அவரது மகன் விஜயபிரசாத், மகேந்திரன், விருமாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X