பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளிக்குடியில் கி.பி.8ம் நுாற்றாண்டு விஷ்ணு சிலை கண்டுபிடிப்பு

Added : செப் 15, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 கள்ளிக்குடியில் கி.பி.8ம் நுாற்றாண்டு விஷ்ணு சிலை கண்டுபிடிப்பு

மதுரை : மதுரை மாவட்டம் கள்ளிக்குடி பெரிய உலகாணிகுண்டாறு மேற்கு கரையில் 8ம் நுாற்றாண்டு பாண்டியர் கால விஷ்ணு சிலை கண்டுபிடிக்கப்பட்டது.

அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் மருதுபாண்டியன் கூறியதாவது: காமராஜ் பல்கலை உறுப்பு கல்லுாரி தமிழ்த்துறை பேராசிரியர் சங்கையா, மாணவர் கண்ணனின் தகவலின் பேரில் ஆய்வாளர் உதயகுமார் உடன் ஆய்வு செய்ததில்8ம் நுாற்றாண்டு சிலை என தெரிந்தது. சிலையின் அமைப்பு, ஆயுதங்கள் அடிப்படையில் காலம் கணிக்கப்பட்டது.

குறிப்பாக முப்புரி நுால் வலது கைக்கு மேல் செல்கிறது. இது போல்பாண்டிய நாட்டில், பல்லவர் காலத்தில் பல சிலைகள் கிடைத்துள்ளது. நின்ற நிலையில் உள்ள விஷ்ணுவின்கைகளில் உள்ள சக்கரம், சங்கின் அமைப்பு பழமையான சிலை என காட்டுகிறது.

மதுரை கல்வெட்டு தொகுதி ஒன்றில்இவ்வூரின்பழைய பெயர் குலசேகராதிப சதுர்வேதி மங்கலம், உலகுணிமங்கலம் என்று உள்ளது.கி.பி.13ம் நுாற்றாண்டின் பாண்டியர் கல்வெட்டின் படி இவ்வூர்கிராம சபையினர் மீன்பிடிவரி வருவாயில்ஆண்டு தோறும் குளங்கள் வெட்டி பராமரித்துள்ளனர். அந்த கல்வெட்டு தமிழ், சமஸ்கிருத மொழியில் உள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-செப்-202015:19:59 IST Report Abuse
Suresh Kumar நோ.. எங்க பெரியார் மண்ணுல யாரோ வேணும்னே விஷ்ணு சிலையை வச்சிருக்காங்க.
Rate this:
Cancel
15-செப்-202013:52:37 IST Report Abuse
ஆரூர் ரங் அப்போ விஷ்ணுவும் தமிழ்க் கடவுளா? திமுக வியாபாரம் போச்சே
Rate this:
Cancel
15-செப்-202012:31:04 IST Report Abuse
ஆப்பு இறைவனுக்கு நித்திய வணக்கங்களை அளிப்பவர்கள், வேதமோதுபவர்கள் முப்புரிநூல் அணியவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X