சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கால் காஸ் ஏஜன்சி உரிமையாளர் தற்கொலை

Added : செப் 15, 2020
Share
Advertisement

மதுரை : மதுரையில் ஆக்சிஜன் நைட்ரஜன் சிலிண்டர் வினியோகிஸ்தர் குமரன் 55, தொழில் நஷ்டத்தால் டிபன் கடை நடத்த அதுவும் கொரோனா ஊரடங்கால் தடைபட விரக்தியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

புதுவிளாங்குடியைச் சேர்ந்த இவர் ஆரப்பாளையத்தில் ஸ்ரீ பாலாஜி ஏஜன்சி என்ற பெயரில்ஆக்சிஜன் நைட்ரஜன் சிலிண்டர் சப்ளை செய்து வந்தார். மனைவி, இரு மகள்கள் உள்ளனர்.தொழில் வளர்ச்சிக்காக சிலரிடம் கடன் வாங்கி தவணை முறையில் செலுத்தி வந்த நிலையில் நஷ்டம் ஏற்பட்டது.கடனை செலுத்த முடியாமல் மனஉளைச்சலுக்கு ஆளானதால் மாரடைப்பு ஏற்பட்டது.

அதில் இருந்து மீண்டவர், டிபன் கடை வைத்தாவது பிழைக்கலாம் எனக்கருதி அந்த தொழிலையும் செய்து கொஞ்சம் கொஞ்சமாக கடனை அடைத்து வந்தார். கொரோனா ஊரடங்கு அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தது. சில வாரங்களாக மனஉளைச்சலுக்கு ஆளான குமரன், நேற்று அதிகாலை வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கூடல்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X