தமிழ்நாடு

இரவு ஒரு மணிக்கு அலறும் ஓ.டி.பி.,க்கள்; மக்களை சோதிக்கும் ஆர்.டி.ஓ., அலுவலகங்கள்

Added : செப் 15, 2020
Share
Advertisement

மதுரை : மதுரையில் ஓட்டுனர் உரிமம் பெறுதல், புதுப்பித்தல் முன்பதிவுக்கான (ஸ்லாட் புக்கிங்) ஆன்லைன் அனுமதியை வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் இரவு 1:00 மணிக்கு வழங்குவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

கொரோனா தாக்கத்தால் அலுவலகங்கள் மூடப்பட்டு பின் 30 சதவீதம் ஊழியருடன் இயங்க அனுமதிக்கப்பட்டபோது ஊழியர் பற்றாக்குறையால் முன்பதிவு முறை அமல்படுத்தப்பட்டது. எல்.எல்.ஆர்., ஓட்டுனர் உரிமம் பெறுதல் மற்றும் புதுப்பித்தலுக்கு முன்பதிவு செய்தோர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். ஓட்டுனர் உரிமம் வழங்குவது உள்ளிட்ட பணிகள் தேங்கின.

இந்நிலையில் ஆக.10ல் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் திறக்கப்பட்டன. அலுவலகமும் 100 சதவீதம் ஊழியருடன் செயல்படும் நிலையிலும் முன்பதிவு முறை அமலில் உள்ளது. மதுரையில் 4 ஆயிரம் பேர் ஓட்டுனர் உரிமம் மற்றும் புதுப்பித்தலுக்காக ஒரு மாதமாக காத்திருக்கின்றனர். அவர்கள் கூறியதாவது: இரவு 1:00 மணிக்கு முன்பதிவு அனுமதி துவங்கி ஒன்றரை நிமிடத்தில் 'லிங்க்' நின்று விடுகிறது.

அதற்குள் தனிநபர் மற்றும் பயிற்சி பள்ளிகள் அலைபேசிக்கு வரும் ஓ.டி.பி., (ஒன் டைம் பாஸ்வோர்டு) எண்ணை பதிவேற்றம் செய்து பதிவை உறுதி செய்ய வேண்டும். இதற்காக பயிற்சி பள்ளிகள் வாடிக்கையாளரை இரவில் எழுப்பி ஓ.டி.பி., எண்களை கேட்க வேண்டியுள்ளது.

பெண் வாடிக்கையாளரிடம் கேட்பதுசிரமமாக உள்ளது. இந்த முறையை ரத்து செய்து பழைய முறையை அதாவது தனிநபர் தவிர பயிற்சி பள்ளிகளுக்கு சுழற்சி முறையில் தினம் ஒரு நாள் ஒதுக்கி அழைப்பு விடுத்து எல்.எல்.ஆர்., உரிமம் வழங்கல் மற்றும் புதுப்பித்தல் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X