தமிழ்நாடு

கோச்சடை, அனுப்பானடியில் போலீஸ் ஸ்டேஷன்கள் எப்போது? தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா

Added : செப் 15, 2020
Share
Advertisement
கோச்சடை, அனுப்பானடியில் போலீஸ் ஸ்டேஷன்கள் எப்போது? தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா

மதுரை : மதுரை மாட்டுத்தாவணி, திருப்பாலை போலீஸ் ஸ்டேஷன்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்த நிலையில், கோச்சடை, அனுப்பானடியில் போலீஸ் ஸ்டேஷன்கள் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டில் 2015ல் விரிவாக்க பகுதி ஸ்டேஷன்கள் இணைக்கப்பட்டன. தல்லாகுளம், கூடல்புதுார், அவனியாபுரம், அண்ணாநகர் ஸ்டேஷன் எல்லை பகுதிகளில் குற்றங்கள் அதிகரித்தன. போலீஸ் பற்றாக்குறை ஏற்பட்டது. இதை தவிர்க்க மாட்டுத்தாவணி, திருப்பாலை, கோச்சடை, அனுப்பானடி போலீஸ் ஸ்டேஷன்கள் உருவாக்கப்படும் என அரசு அறிவித்தது.இதில் மாட்டுத்தாவணி, திருப்பாலை ஸ்டேஷன்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மாட்டுத்தாவணி ஸ்டேஷனிற்கு கீழ் புதுார், அண்ணாநகர் ஸ்டேஷன்களுக்குட்பட்ட உத்தங்குடி, ரிங்ரோடு விரிவாக்க பகுதிகள் கொண்டு வரப்பட உள்ளன. திருப்பாலை ஸ்டேஷனிற்கு கூடல்புதுார், தல்லாகுளம் ஸ்டேஷனிற்குட்பட்ட பொறியாளர் நகர், அய்யர்பங்களா, கலைநகர் உள்ளிட்ட பகுதிகள் கொண்டு வரப்பட உள்ளன.

எஸ்.எஸ்.காலனி, கரிமேடு ஸ்டேஷன் பகுதிகளுக்குட்பட்ட சில பகுதிகளை பிரித்து கோச்சடை ஸ்டேஷன், தெப்பக்குளம், அவனியாபுரம் ஸ்டேஷன்களுக்குட்பட்ட சில பகுதிகளை பிரித்து அனுப்பானடி ஸ்டேஷன் அமையவுள்ளன.

இதன்மூலம் போலீஸ் பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். குற்றங்களையும் கட்டுப்படுத்தலாம். விரைவில் இவ்விரு ஸ்டேஷன்களுக்கும் நிதிஒதுக்கீடு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணாநகர், கூடல்புதுார், திருநகர், மாட்டுத்தாவணி போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்கள் அமைய ரூ.5.52 கோடி ஒதுக்கப்படவுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X