சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்...

Added : செப் 15, 2020
Share
Advertisement

15 பவுன் நகை திருட்டு

மதுரை: ஆனையூர் சஞ்சீவ் நகர் முத்துகிருஷ்ணராஜா 57. எல்.ஐ.சி., அலுவலர்.அருகில் உள்ள அக்கா வீட்டிற்கு சென்ற நிலையில் இவரது வீட்டில் 15 பவுன் நகைகள், ரூ.40 ஆயிரம் திருடப்பட்டது. கூடல்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

மாட்டுவண்டி பந்தயம் 6 பேர் சிக்கினர்

மேலுார்: திருவாதவூர் -ஆமூர் ரோட்டில்மாட்டுவண்டி பந்தயத்தில் கலந்து கொள்ள வேனில் மாடுகள் கொண்டு சென்ற அவற்றின் உரிமையாளர்கள் மட்டங்கிபட்டி பெரியகருப்பன் 35, மணி 39, கல்லம்பட்டி இளங்குமரன் 55, வேன் டிரைவர்கள் வெள்ளநாயகம்பட்டி கணேசன் 36, கல்லல் அப்துல்கலாம் 24, எஸ்.கல்லம்பட்டி குருமூர்த்தி 30, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மூன்று வேன்களை பறிமுதல் செய்தனர்.

டூவீலர் மோதி முதியவர் பலி

மதுரை: முசுண்டுகீரிப்பட்டி பாண்டி 65. நேற்றுமுன்தினம் இரவு அழகர்கோவில் மெயின் ரோட்டில் நடந்து சென்ற போது ஆத்திக்குளம் சுரேந்தர்24, ஓட்டி சென்ற டூவீலர் மோதிஇறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

விபத்துக்களில் 2 பேர் பலி

கள்ளிக்குடி: சோழவந்தான் கொடிமங்கலம் சிவக்குமார் 35, மினி வேன் டிரைவர். மினி வேன் கிளீனர் பாலமுருகன் 32. நேற்று முன்தினம் மதுரையில் இருந்து விருதுநகருக்கு மினி வேனில் சென்றனர். நல்லமநாயக்கன்பட்டி அருகே முன்னால் சென்ற வாகனத்தை முந்தும் போது ரோடு நடுவில் உள்ள தடுப்பில் மோதியதில் பாலமுருகன் காயமுற்றார். மதுரை அரசு மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார்.

கன்னியாகுமரி நயினார் 48, மினி லாரி டிரைவர். இவர் சரக்குகள் ஏற்ற மதுரைக்கு மினி லாரியில் சென்றார். சிவரக்கோட்டை அருகே ரோட்டோரம் பழுதாகி நின்ற லாரி மீது மினி லாரி மோதியதில் பலத்த காயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில்சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர் திருட்டு: 4 பேர் கைது

திருமங்கலம்: கப்பலுாரில் தனியார் நிறுவன கிணறுகளில் மூடப்பட்டுஉள்ள இரும்பு கதவுகள் தொடர்ந்து திருடு போயின. நகர் போலீசார் விசாரித்தனர். சந்தேகமுற்று உச்சபட்டி ராஜபிரபு 23, கப்பலுார் ராஜவேல் 19, வெண்மணி 23, கருப்பசாமியை 23, விசாரித்தனர். அவர்கள் இரும்பு பொருட்கள் மற்றும் காண்டை, சிந்துபட்டியில் 14 ஆடுகளை திருடியது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

சூதாட்டம்: 11 பேர் கைது

சோழவந்தான் : காடுபட்டி எஸ்.ஐ.,மாரிக்கண்ணன் தலைமையில் போலீசார் மேலக்கால் -விக்கிரமங்கலம் ரோட்டில்ரோந்து சென்றனர். மூன்று வீடு பகுதியில் பணம் வைத்து சூதாடிய 11 பேரை கைது செய்தனர். ரூ.3620 பறிமுதல் செய்யப்பட்டது.ஆபாச படம்: ஒருவர் கைதுதிருமங்கலம்: கணபதிநகர் தனியார் நிறுவன ஊழியர் அருண்குமார் 27, அலைபேசியில் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்தார். அவரை திருமங்கலம் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

சோழவந்தான்: கச்சிராயிருப்பு பேச்சி 60, தென்னந்தோப்பில் வழக்கம்போல்மட்டை சேகரிக்க சென்றார். மின் கம்பங்களுக்கிடையே இழுத்து கட்டப்பட்ட தாழ்வாக சென்ற மின் ஒயர் கிழே விழுந்து கிடந்தது. அதை மிதித்தவர் மின்சாரம் தாக்கி இறந்தார்.

சிறுவன் தற்கொலை

சோழவந்தான்: சிவன்கோயில் தெரு மகேந்திரன் மகன் பரத்குமார் 12, தனியார் பள்ளி 8ம் வகுப்பு மாணவர். இவர் கொரோனா விடுமுறையில் வீடு தங்காமல் வெளியே சுற்றி திரிந்தார். தந்தை கண்டித்ததால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சோழவந்தான் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X