பொது செய்தி

இந்தியா

சீன எல்லை பிரச்னை: பார்லி.,யில் ராஜ்நாத் விளக்கமளிக்க வாய்ப்பு!

Updated : செப் 15, 2020 | Added : செப் 15, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புது டில்லி: பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், சீனவுடனான எல்லை பிரச்னை குறித்து செவ்வாயன்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.



latest tamil news



இந்திய எல்லை பகுதியான லடாக்கிற்குள் சீன ராணுவம் ஏப்ரல் மாதம் முதல் அத்துமீறிலில் ஈடுபட்டு வருகிறது. ஜூன் 15-ம் தேதி இப்பிரச்னை பெரிதாக வெடித்தது. சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பை தடுக்க முயன்ற இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். சீனா தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் இறந்ததாக நம்பப்படுகிறது. கடந்த மூன்று வாரங்களில் இரண்டு முறை, சீனப் துருப்புக்கள் பாங்காங் ஏரி பகுதியில் அத்துமீறியுள்ளன.

ஆக., 31-ம் தேதி பகல் நேரத்தில் இந்திய வீரர்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதியை சீன வீரர்கள் சூழ்ந்தனர். சீனாவின் இந்த முயற்சியை இந்தியா தடுத்ததாக வெளியுறவு அமைச்சகம் கூறியிருந்தது.


latest tamil news



சீன நடவடிக்கைகளுக்கு பிறகு ஒவ்வொரு முறை நடைமுறை எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் நிலைமை குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் என ராகுல் கேட்டிருந்தார். இந்த நிலையில் பாராளுமன்ற வர்த்தக ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் இந்திய - சீன எல்லை பிரச்னை குறித்து அறிக்கை வெளியிடப்படுமா என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மிக முக்கியமான பிரச்னை என்பதால் அது பற்றி யோசித்து முடிவெடுக்கப்படும். செவ்வாயன்று நடக்கும் கூட்டத்தில் இது பற்றி விளக்குவார்கள் என்றார்.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
15-செப்-202007:23:17 IST Report Abuse
Balasubramanian Ramanathan ஆப்பு நாதனுக்கும், குஞ்சண்ணாவுக்கும் நீயுயார்க் டைம்ஸ் பத்திரிக்கை கிளிப்பிங்ஸ், மற்றும் சீனாவால் அங்குரிக்கப்பட் வீடியோக்களையும் அனுப்பி வையுங்கள். இல்லை யென்றால் நீங்கள் சொல்வது , சொல்லப்போகும் எல்லாம் திசை திருப்பும் கட்டு கதைகளாகிவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X