பொது செய்தி

இந்தியா

வங்கிகளில் குறைந்துள்ள பெரு நிறுவன வாராக்கடன்

Updated : செப் 15, 2020 | Added : செப் 15, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
Banks, NPAs, large industry, வங்கி, பெரு நிறுவனங்கள், வாராக்கடன், குறைவு

புதுடில்லி : வங்கிகளுக்கு பெரிய தொழிற்துறை நிறுவனங்கள் திரும்ப செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ள வாராக்கடன் தொகை 4.36 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது 31 சதவீதம் குறைவாகும்.

வாராக்கடன்கள் குறித்து லோக்சபாவில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் நேற்று கூறியதாவது: கடந்த 2018 மார்ச் மாத நிலவரப்படி வங்கிகளுக்கு பெரிய தொழிற்துறை நிறுவனங்கள் திரும்ப செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்த வாராக்கடன் தொகை ஆறு லட்சத்து 35 ஆயிரத்து 971 கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்த ஜூன் 30ம் தேதி நிலவரப்படி நான்கு லட்சத்து 36 ஆயிரத்து 492 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது 31 சதவீதம் குறைவாகும்.


latest tamil news


விவசாயம் சில்லறை வியாபாரம் வீடு கல்வி கட்டணம் உள்ளிட்ட தேவைகளுக்காக பெறப்பட்டுள்ள கடன்கள் பெருமளவு திரும்ப செலுத்தப்படாமல் உள்ளது. இதனால் கடந்த மார்ச் மாதம் நிலவரப்படி 6.44 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளுக்கு வாராக்கடனாக உள்ளது.தனியார் நிறுவனங்களிடம் இருந்து கடன் தொகையை மீட்டெடுக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடந்த ஐந்து நிதியாண்டுகளில் ஐந்து லட்சத்து 48 ஆயிரத்து 749 கோடி ரூபாய் கடன் தொகையை வங்கிகள் மீட்டன. 2018 - 2019 நிதியாண்டில் மட்டும் அதிகபட்சமாக 1.57 லட்சம் கோடி ரூபாயை வங்கிகள் மீட்டெடுத்தன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
15-செப்-202015:53:49 IST Report Abuse
M S RAGHUNATHAN Whether this includes restructured loans ?
Rate this:
Cancel
G.Kirubakaran - Doha,கத்தார்
15-செப்-202013:42:31 IST Report Abuse
G.Kirubakaran அனுராக் தாகூர், ஒரு விஷயத்தை தெளிவாக கூற வேண்டும். வார கடன்கள் குறைந்தது தள்ளிப்படிக்கு முன்னரே ,தள்ளுபடிக்கு பின்னரே
Rate this:
Cancel
T.B.Sathiyanarayananan - Madurai.,இந்தியா
15-செப்-202013:30:34 IST Report Abuse
T.B.Sathiyanarayananan Pl. if you check the rescheduled accounts, then you definetly find that the same accounts are coming from NPA., but after 3 months again the Banks reschedule the accounts. It is going on .......process to reduce NPA.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X