பொது செய்தி

இந்தியா

பார்லி.,யில் ரூ.2.35 லட்சம் கோடி துணை மானிய கோரிக்கை தாக்கல்

Updated : செப் 15, 2020 | Added : செப் 15, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Additional_GrossExpenditure, GovtSeeks, Parliament, Approval

புதுடில்லி: நடப்பு 2020-21ம் நிதியாண்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கை அரசு நலத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு கூடுதலாக 2.35 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதற்கு ஒப்புதல் கோரி நேற்று பார்லி.யில் துணை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இந்த முதற்கட்ட துணை மானியக் கோரிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கூடுதல் செலவினங்களுக்காக 2.35 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய முதற்கட்ட துணை மானியக் கோரிக்கையை தாக்கல் செய்யப்படுகிறது. இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான 1.66 லட்சம் கோடி ரூபாய் ரொக்கச் செலவும் அடங்கும். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஊதிய உயர்வை சமாளிக்க 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படும்.


latest tamil news


பொதுத் துறை வங்கிகளில் 20 ஆயிரம் கோடி ரூபாய் பங்கு மூலதனம் மேற்கொள்ளப்படும். 'ஜன்தன் யோஜனா' மற்றும் தேசிய சமூக ஆதரவு திட்டங்களில் பயனாளிகள் வங்கிக் கணக்கில் 33 ஆயிரத்து 771 கோடி ரூபாய் நேரடி மானியம் வரவு வைக்கப்படும். இத்தொகையில் 30 ஆயிரத்து 957 கோடி ரூபாய் ஜன்தன் யோஜனா திட்டத்தில் உள்ள பெண்களுக்கும், 2814 கோடி ரூபாய் முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் உள்ளோருக்கும் வழங்கப்படும். 15வது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி அதிகார பகிர்வுக்குப் பின் மாநிலங்கள் சந்திக்கும் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க கூடுதலாக 46 ஆயிரத்து 602 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும். 'முத்ரா' திட்டத்தில் ஒழுங்காக கடனை திரும்பச் செலுத்துவோருக்கு அளிக்கப்படும் 2 சதவீத வட்டிச் சலுகைக்காக 'சிட்பி'க்கு 1232 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும். தேசிய கடன் உறுதி நிறுவனம் குறு சிறு நடுத்தர தொழில்களுக்கு மானியக் கடன் வழங்க கூடுதலாக 4000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news



20 பொதுத்துறை நிறுவன பங்கு விற்பனை


மத்திய நிதித் துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாக்குர் கூறியதாவது: மத்திய அரசின் கொள்கை உருவாக்க அமைப்பான 'நிடி ஆயோக்' பரிந்துரைப்படி 2016 முதல் மத்திய பொதுத் துறையைச் சேர்ந்த 34 நிறுவனங்களில் பங்கு விற்பனை தொடர்பான பணிகள் நடக்கின்றன. அவற்றில் எட்டு நிறுவனங்களில் நிர்ணயித்த இலக்கின் படி பங்கு விற்பனை முடிந்துள்ளது. ஹிந்துஸ்தான் புளோரோகார்பன் ஸ்கூட்டர்ஸ் இந்தியா உள்ளிட்ட 6 நிறுவனங்களை மூடுவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. சேலம் துர்காபூர் உருக்காலைகள், ஏர்-இந்தியா மற்றும் அதன் ஐந்து துணை நிறுவனங்கள் உள்ளிட்ட 20 நிறுவனங்களின் பங்கு விற்பனை தொடர்பான பணிகள் பல நிலைகளில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
15-செப்-202017:36:38 IST Report Abuse
Lion Drsekar அங்கு அப்படி, இங்கு இப்படி, அப்படி கொடுத்தால் இபப்டி எடுத்துக்கொள்கிறார்கள், எப்படியும் நமக்கு எடப்பாடிதான் ஆசான், பார்ப்போம் , வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X