பொது செய்தி

தமிழ்நாடு

நெல்லை தீயணைப்பு வீரர்களுக்கு வீரதீரத்திற்காக தலா ரூ 5 லட்சம் வெகுமதி

Added : செப் 15, 2020
Share
Advertisement

திருநெல்வேலி:மேல்நிலைகுடிநீர் தொட்டியில் இருந்து தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய தீயணைப்பு பணியாளர் இருவருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் ஆக.,15ம் தேதி காலையில் சேவியர் காலனி மேல்நிலைகுடிநீர் தொட்டி மீது ஏறி நின்ற கணேசன் என்பவர் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.அவரது நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் பறித்துக்கொண்டார்கள். அதனை மீட்டுத்தரக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை இல்லாததால்,குடிநீர் தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு முயன்றார். அவரை தீயணைப்பு வீரர்கள் கண்இமைக்கும் நேரத்தில் காப்பாற்றினர்.
இந்த செயலுக்கு அண்ணாதுரை பிறந்த தினத்தையொட்டி வீரதீர செயல் புரிந்ததற்கான விருது மற்றும் வெகுமதிக்கு தீயணைப்பு அலுவலர் வீரராஜ், வீரர் செல்வம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு தலா ரூ 5 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X