பொது செய்தி

தமிழ்நாடு

1.26 லட்சம் மரக்கன்று நட 'காவிரி கூக்குரல்' திட்டம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

கோவை:'காவிரி கூக்குரல்' இயக்கம் சார்பில், தமிழகத்தின், 20 மாவட்டங்களில், இன்றும், நாளையும், 1.26 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் பணியில், வாழ்நாள் முழுவதும் ஈடுபட்ட தங்கசாமி நினைவு தினம் (செப்.,16) முன்னிட்டு, காவிரி கூக்குரல் இயக்கத்தினர், ஈஷா தன்னார்வலர்கள், இந்த பணியை மேற்கொள்கின்றனர்.இதையொட்டி, இன்றும், நாளையும், தமிழகத்தில், 20 மாவட்டங்களில், 45 இடங்களில், 331 ஏக்கரில் மரக்கன்று நடும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. மொத்தம், 1.26 லட்சம் மரக்கன்றுகள், விவசாயிகளின் நிலங்களில் நடப்பட உள்ளன.குறைந்தபட்சம், 450 மரம் முதல் அதிகபட்சம் 15 ஆயிரம் மரங்கள் வரை விவசாயிகள் நட உள்ளனர். தொழில்நுட்ப ஆலோசனைகளை காவேரி கூக்குரல் இயக்க தன்னார்வலர்கள் அளிக்கின்றனர்.காவிரி கூக்குரல் இயக்கத்தால், தமிழகம், கர்நாடகாவில் இதுவரை, 83 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் நடவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X