பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் 448 பேர் 'டிஸ்சார்ஜ்'  இதுவரை 18,756 பேர் நலம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

கோவை:கோவையில், ஒரே நாளில் 448 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்.கோவை, பீளமேடு காவல் நிலையத்தை சேர்ந்த 33 வயது ஆண் போலீஸ், நியூ காவலர் குடியிருப்பை சேர்ந்த 43 வயது பெண் போலீஸ், திருச்சி ரோடு தனியார் வங்கி ஊழியர் , அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 33 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா தொற்று நேற்று கண்டறியப்பட்டது.சிங்காநல்லுாரில் 40 பேர், ஒண்டிப்புதுாரில் 15 பேர், ஆர்.ஜி.புதுார் 14 பேர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்த பாதிப்பு 22 ஆயிரத்து 662 ஆக உயர்ந்தது. கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 83 வயது முதியவர், 57 வயது ஆண், 42 வயது பெண் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். மொத்த பலி 357 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 448 பேர், பூரண குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். குணமடைந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 756 ஆக உயர்ந்தது. தற்போது, 3,559 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X