பொது செய்தி

தமிழ்நாடு

வீடு வீடாக ஆய்வு செய்ய 2,000 கள பணியாளர்

Added : செப் 15, 2020
Share
Advertisement

கோவை:கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, வீடு, வீடாக சென்று ஆய்வு செய்ய, 2,000 கள பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.கோவை மாநகர பகுதியில், நோய் பாதிப்பு தீவிரமடையும் முன், சிகிச்சை அளிக்க வசதியாக, வீடு வீடாகச் சென்று, சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி இருக்கிறதா என, கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பணியில், வார்டுக்கு, ஏழு பேர் வீதம், 700 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது, வார்டுக்கு, 20 பேர் வீதம் கூடுதலாக, 2,000 பேர் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆட்கள் நியமிக்கும் பணியில், மண்டல உதவி கமிஷனர்கள் ஈடுபட்டுள்ளனர். களப்பணியாளர்கள், பல்ஸ் ஆக்ஸி மீட்டர், உடல் வெப்ப அளவு மானி இல்லாமல் செல்வதாகவும், வாய்மொழியாக தகவல் கேட்டுச் செல்வதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதைத்தொடர்ந்து, 1,000 பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மற்றும் வெப்ப அளவு மானி கொள்முதல் செய்து, கள பணியாளர்களுக்கு வழங்க, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X