பொது செய்தி

தமிழ்நாடு

சிறை கைதிகளை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து முறையீடு

Added : செப் 15, 2020
Share
Advertisement

ஈரோடு: முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு, சிறைகளில் உள்ள பயங்கரவாதிகள், குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களை, விடுதலை செய்யக்கூடாது என்று கூறி, ஹிந்து மக்கள் கட்சி, ஈரோடு மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கினர். இதுகுறித்து அவர் கூறியதாவது: கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக, கைது செய்யப்பட்ட பாக்., ஆதரவு பயங்கரவாதிகள், கோவை சிறையில் உள்ளனர். இதுபோல் பல்வேறு மோசமான செயல்களில் ஈடுபட்டு கைதானோர், சிறைகளில் உள்ளனர். அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு, 10 ஆண்டுக்கும் மேலான சிறை கைதிகளை விடுதலை செய்கின்றனர். இதில் குண்டு வெடிப்பு கைதிகளையும், விடுவிக்க உள்ளதாக அறிந்தோம். அவர்களை விடுதலை செய்யக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X