பொது செய்தி

தமிழ்நாடு

'மக்காசோளத்தில் நல்ல மகசூல் கிடைக்கும்' படைப்புழு தாக்குதல் அச்சம் வேண்டாம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

ஈரோடு: 'மக்காசோளத்தில் நல்ல மகசூல் கிடைக்கும்' படைப்புழு தாக்குதல் குறித்து அச்சம் வேண்டாம் என்று, வேளாண் அதிகாரி தெரிவித்தார்.


தாளவாடி மலைப்பகுதியில், 11 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள, மக்காசோள பயிரின் வளர்ச்சி, படைப்புழு தாக்குதல் குறித்து, ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தாளவாடி மலைப்பகுதியில், நடப்பாண்டில் நல்ல மழை பெய்ததால், 11 ஆயிரம் ஏக்கர் வரை மக்காசோளம் பயிரிட்டுள்ளனர். விதைப்பு முடிந்து, 30 முதல், 35 நாள் பயிராக உள்ளதால், வளர்ச்சி, படைப்புழு தாக்குதல், பிற தேவை குறித்து ஆய்வு செய்துள்ளோம். கடந்தாண்டுகளில் படைப்புழு தாக்குதலால், சில மாவட்டங்களில் சேதம் ஏற்பட்டது. இதனால் நடப்பாண்டு முன்னதாகவே, விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதன் அறிகுறி தெரிந்தால், மேற்கொள்ள வேண்டிய பணி குறித்து, விளக்கி வருகிறோம். இதற்கு தீர்வு காண, ஐந்து குழு அமைத்து, முழுமையாக ஆய்வு நடக்கிறது. இதில், ஓரிரு இடங்களில் சில படைப்புழு தென்படுகிறது. அதுவும் மழை பெய்வதால், இப்புழுக்கள் இறந்து விடும். பொருளாதார சேதம் ஏற்படும் வகையில் பாதிப்பு துவங்கவில்லை. நல்ல மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X