பொது செய்தி

தமிழ்நாடு

இலவச பட்டா கேட்க அழைத்து வரப்பட்ட கூட்டம்: கலெக்டர் காட்டம்; 4 பேர் மீது வழக்குப்பதிவு

Added : செப் 15, 2020
Share
Advertisement

ஈரோடு: இலவச பட்டா கேட்டு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு, 70க்கும் மேற்பட்டோரை அழைத்த வந்த நான்கு பேர் மீது, கலெக்டர் உத்தரவுப்படி, வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


பெருந்துறை தாலுகா, கருக்குபாளையம், பொன்னாங்காடு காலனி பகுதியில், அருந்ததியர் மக்கள், பல ஆண்டாக புறம்போக்கில் வசிக்கின்றனர். இவர்களில், 40 குடும்பத்தார், இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு, அ.பு.அ.தி.மு.க., ஆதிதிராவிடர் பிரிவு செயலாளர் சின்னசாமி தலைமையில், நேற்று அழைத்து வரப்பட்டனர். சம்பத் நகர் சாலையில், 70க்கும் மேற்பட்டோரை சாலையோரம் அமர வைத்துவிட்டு, சின்னசாமி தலைமையிலான குழு, மனு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த கலெக்டர் கதிரவன், 'கூட்டமாக எதற்காக நிற்கிறீர்கள்' என பெண்களிடம் கேட்டார். வீட்டு மனை பட்டா கோரி, மனு வழங்க வந்தோம் என்றனர். அப்போது சின்னசாமி மற்றும் சிலர் வந்து, கலெக்டரிடம் மனுவை நீட்டினர். அதை பெறாத கலெக்டர், அங்கு வந்த போலீசாரிடம், 'கொரோனா பரவல் சமயத்தில், வயதானவர்கள், பெண்களை கூட்டமாக அழைத்து வந்துள்ளனர். இவர்களை அழைத்து வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யுங்கள். கூட்டமாக கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதிக்காதீர்கள்,' என கோபமாக கூறி சென்றார். இதையடுத்து, சின்னசாமி உட்பட நால்வர் மீது, சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X