பொது செய்தி

தமிழ்நாடு

பூட்டிய பூங்காவில் மலைப்பாம்பு 'உலா'

Added : செப் 15, 2020
Share
Advertisement

பவானிசாகர்: பவானிசாகர் அணை பூங்காவில் புகுந்த மலைப்பாம்பை, வனத்துறையினர் மீட்டு, காப்புக்காட்டில் விட்டனர். பவானிசாகர் அணையை ஒட்டி, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பூங்கா உள்ளது. கொரோனா அச்சுறுத்தலால், ஆறு மாதமாக பூங்கா மூடப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை ஊழியர்கள், நேற்று காலை பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மலைப்பாம்பு நடமாடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பவானிசாகர் வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். ஊழியர்கள் சென்று பார்த்தபோது, 7 அடி நீள மலைப்பாம்பு, ஹாயாக தரையில் படுத்திருந்தது. மலைப்பாம்பை பாதுகாப்பாக மீட்டு, பவானிசாகர் வனப்பகுதி காப்புக்காட்டில் விட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X