பொது செய்தி

தமிழ்நாடு

இடைவேளைக்கு பின் மீண்டும் ஆரம்பம்: முக கவசத்தை மறந்தால் ரூ.200 'தண்டம்'

Added : செப் 15, 2020
Share
Advertisement

ஈரோடு: கொரோனா ஊரடங்கு தொடங்கியது முதல், வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, பொது இடங்களில், முக கவசம் அணியாமல் நடமாடியவர்களுக்கு, ஈரோடு மாநகராட்சி நிர்வாகம், 100 ரூபாய் அபராதம் விதித்தது. ஐந்து மாதங்களில், 10 ஆயிரம் பேரிடம், 10 லட்சம் ரூபாய் வசூலானதாக, மாநகராட்சி தெரிவித்தது. அதேசமயம் போலி ரசீது கொடுத்து, அபராத தொகை வசூலிக்கப்பட்டதாக, மக்கள் தரப்பில் புகாரும் எழுந்தது. இதெல்லாம் பழைய கதை. இடையில் அபராதம் வசூலிப்புக்கு இடைவேளை விடப்பட்டது. தற்போது மாநகரில், தொற்று அதிகமாகி வருவதால், அபராத படலத்தை, மாநகராட்சி நேற்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. முக கவசம் அணியாமல் சுற்றுவோருக்கு, குறைந்தபட்சம், 200 ரூபாய் அபராதம் விதிக்கும் நடைமுறை, அமலுக்கு வந்தது. முதல் நாளில், 55 பேர் தண்டம் கட்டினர். அதேபோல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதோர், சாலைகளில் எச்சில் துப்புவோர், கொரோனா விதிகளை கடைப்பிடிக்காத தனிநபருக்கு, 500 ரூபாய், விதிமீறும் கடைகள், வர்த்தக நிறுவனங்களுக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் எச்சரித்துள்ளார். இதற்கு முன், மாநகராட்சி பணியாளர்கள் மட்டுமே அபராதம் விதித்தனர். இனி சுகாதார ஆய்வாளர், வருவாய் துறையினர், எஸ்.ஐ., அளவிலான போலீசாரும், அபராதம் விதிப்பார்கள். இதற்கு கலெக்டர் அனுமதித்துள்ளதாக, கமிஷனர் தெரிவித்தார்.


கோபியில்...: கோபி நகராட்சி பகுதியில், முக கவசம் அணியாமல் நடமாடுவோரிடம், நேற்று முதல் அபராதம் வசூலிப்பது தொடங்கியது. சுகாதார ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர், ல.கள்ளிப்பட்டி பிரிவில், காலை, 11:00 மணி முதல், 1:00 மணி வரை நடத்திய சோதனையில், 26 பேருக்கு, தலா, 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X