சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'அவனே அடாவடி; எனக்கு அறிவுரை கூறலாமா?' தம்பியை கொன்ற போதை அண்ணன் வாக்குமூலம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

ஈரோடு: கருங்கல்பாளையத்தில், 20 வயது தம்பியை கொன்ற, 29 வயது குடிபோதை அண்ணன், போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.


ஈரோடு, கருங்கல்பாளையம், கமலாநகர், மூன்றாவது வீதியை சேர்ந்த கட்டட தொழிலாளி மனோகரன், 59; இவரின் இரண்டாவது மகன் சங்கர், 29; மூன்றாவது மகன் தினேஷ், 20; திருமணமாகி மனைவியை பிரிந்து சங்கர் வாழ்கிறார். இந்நிலையில் தம்பி தினேஷை, குடிபோதையில் நேற்று முன்தினம், சங்கர் கொலை செய்தார். கருங்கல்பாளையம் போலீசில் சரணடைந்த அவரை, கைது செய்த போலீசார், கோபியில் உள்ள, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.

போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: தஞ்சை மாவட்டம் கொள்ளிடத்தில், தனியார் ஒருவரிடம், சங்கர் யானை பாகனாக இருந்தார். தீவிர குடிப்பழக்கம் உள்ளவர். இரு தினங்களுக்கு முன், மனோகரனின் நண்பர் ஒருவர், குடிபோதையில் திரிந்த சங்கரை பார்த்துள்ளார். அவர் மனோகரனிடம் கூறிய நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, தந்தை வீட்டுக்கு சங்கர் சென்றுள்ளார். அப்போது மனோகரன், தினேஷ் ஆகியோர் சங்கருக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். அப்போது திரும்பி சென்ற சங்கர், ஒரு மணி நேரம் கழிந்து, மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அரவாணிகளுடன் சுற்றிக்கொண்டு, அடாவடியாக திரியும் தம்பி தினேஷ், தனக்கு அறிவுரை கூறியதை நினைத்து ஆத்திரம் அடைந்தார். வீட்டில் கிடந்த சுத்தியலை எடுத்து, தூங்கி கொண்டிருந்த தம்பியை, நான்கு முறை தலையில் தாக்கியதில், மூளை சிதறி இறந்தார். இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X