பொது செய்தி

தமிழ்நாடு

டேங்க் ஆப்பரேட்டர்களுக்கு 5 மாத ஊதியம் கிடைக்குமா?

Added : செப் 15, 2020
Share
Advertisement

சேலம்: ஊராட்சி குடிநீர் டேங்க் ஆப்பரேட்டர்கள், ஐந்து மாத நிலுவை ஊதியம் கேட்டு, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கெங்கவல்லி ஒன்றியம், பச்சமலை ஊராட்சி டேங்க் ஆப்பரேட்டர்கள் ஒன்பது பேர், வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள், 20 ஆண்டுக்கும் மேலாக, குடிநீர் டேங்க் ஆப்பரேட்டராக பணியாற்றி வருகிறோம். பழனிசாமி என்பவருக்கு மட்டும், முறையான ஊதியம் கிடைக்கிறது. மீதமுள்ள ஒன்பது பேருக்கு, ஐந்து மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதற்கு முன், முறையாக வங்கியில் செலுத்தப்பட்ட ஊதியம், அதன்பின், ஊராட்சியில் நேரடியாக வழங்கப்பட்டது. தற்போது, ஐந்துமாதமாக நிறுத்தி விட்டனர். வயது முதிர்வால், வேறு பணிக்கு, எங்களால் செல்ல இயலாது. எனவே, நிலுவை ஊதியம் வழங்கிட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X