பொது செய்தி

தமிழ்நாடு

புதிதாக 297 பேருக்கு தொற்று; இதுவரை 231 பேர் இறப்பு

Added : செப் 15, 2020
Share
Advertisement

சேலம்: சேலத்தில், புதிதாக நேற்று, 297 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 231 பேர் இறந்துள்ளனர். சேலம், அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெறுவோரில், 27 பேர் குணமாகி நேற்று, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரேநாளில், நேற்று சேலத்தில் புதிதாக, 297 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாநகராட்சி, 189, ஒமலூர், 14, கெங்கவல்லி, வாழப்பாடியில் தலா, 10, ஆத்தூரில் எட்டு பேர், வீரபாண்டியில் ஏழு பேர், காடையாம்பட்டி, பனமரத்துப்பட்டி, பெ.நா.பாளையத்தில் தலா, ஆறு பேர். மேட்டூர் நகராட்சி ஐந்து, ஆத்தூர் புறநகர் நான்கு, இடைப்பாடி, மகுடஞ்சாவடி, நங்கவள்ளி, சேலம் ஒன்றியம், வடுகப்பட்டியில் தலா மூவர், தாரமங்கலம், நரசிங்கபுரத்தில் தலா இருவர், கொங்கணாபுரம், மேச்சேரி தலா ஒருவர் என, மாவட்டத்தில், 295 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இவர்கள் தவிர, தர்மபுரி, கி.கிரியில் தலா ஒருவர் என, சேலத்தில் பாதிக்கப்பட்டவர்கள், 297 பேர். இவர்களுடன் சேர்ந்து, சேலத்தில் இதுவரை, 14 ஆயிரத்து, 774 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள், 231 பேர்.


இரு போலீஸ் ஸ்டேஷன் மூடல்: சேலம், கிச்சிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில், 52 வயதுள்ள இன்ஸ்பெக்டருக்கு, நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பது, நேற்று முன்தினம் இரவு உறுதியானது. இதையடுத்து, போலீஸ் ஸ்டேஷன் மூடப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த, 10க்கும் மேற்பட்ட போலீசார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


* இதேபோல், மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட, 29 வயது வாலிபருக்கு நடத்தப்பட்ட சோதனையில் தொற்று உறுதியானது. இதையடுத்து, மாநகர மத்திய குற்றப்பிரிவு ஸ்டேஷன் மூடப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்திய, ஐந்துக்கும் மேற்பட்ட போலீசார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X