பொது செய்தி

தமிழ்நாடு

அரசு அறிவித்த பயணப்படி கேட்டு ரேஷன் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

சேலம்: தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில், சேலத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நாட்டாண்மை கழக கட்டடம் முன், நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் கணேசன் தலைமை வகித்தார். நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு இணையான ஊதியம் கேட்டும், தமிழக அரசு உடனடியாக, பேச்சுவார்த்தைக்கு அழைக்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.

அதன்பின், கணேசன் கூறியதாவது: சம வேலைக்கு, சம ஊதியம் கேட்டு, பல கட்ட போராட்டங்கள் நடத்தியும், அரசு செவிசாய்க்கவில்லை. 20 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களின் பணியை, வரன்முறை செய்ய வேண்டும். சரியான எடையில், ரேஷன் பொருட்களை, 100 சதவீதம் கடைகளுக்கு வினியோகிக்க வேண்டும். விற்பனையாளர்களுக்கு முக கவசம், கையுறை, கிருமிநாசினி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். அரசு அறிவித்தும், போக்குவரத்து பயணப்படி, இன்னமும் சேலம் மாவட்டத்தில் கிடைக்கவில்லை. ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X