பொது செய்தி

தமிழ்நாடு

சேலத்தில் இன்று 10 இடத்தில் கொரோனா மருத்துவ முகாம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

சேலம்: சேலம் மாநகராட்சியின், நான்கு மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று, 10 இடங்களில் கொரோனா சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது என, மாநகராட்சி கமிஷனர் சதீஷ் தெரிவித்துள்ளார்.


இது குறித்து, அவர் விடுத்துள்ள அறிக்கை:


சூரமங்கலம் மண்டலம்: இரண்டாவது வார்டு கிருஷ்ணாநகர், அம்மாபாளையம், 22வது வார்டு மலங்காட்டான் தெரு, சிவதாபுரம். அஸ்தம்பட்டி மண்டலம்: 12வது வார்டு வாத்தியார் தோட்டம், மரவனேரி, 30வது வார்டு சாய்பாபா தெரு, செவ்வாய்ப்பேட்டை.


அம்மாபேட்டை மண்டலம்: 10வது வார்டு வன்னியர் நகர், பொன்னம்மாபேட்டை. 37 வது வார்டு செல்வாநகர், அம்மாபேட்டை. கரிமேடு முனியப்பன் கோவில் தெரு.


கொண்டலாம்பட்டி மண்டலம்: 50 வது வார்டு சிங்காரமுனியப்பன் கோவில் தெரு, 54வது வார்டு ரேடியோ பார்க் தெரு, தாதகாப்பட்டி. 58 வது வார்டு செல்லக்குட்டிகாடு. இவை தவிர உழவர்சந்தைகள், கடை வீதி என, 126 இடங்களில் நடமாடும் வாகனங்கள் மூலமாகவும், சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெறும். மக்கள் இதை பயன்படுத்தி, மருத்துவ அலுவலர்களின் ஆலோசனையை கேட்டறிந்து, உடல் நலனை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X