பொது செய்தி

தமிழ்நாடு

3.20 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்

Added : செப் 15, 2020
Share
Advertisement

சேலம்: சேலம், அஸ்தம்பட்டி மண்டலம், என்.ஜி.ஜி.ஓ., காலனி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், குழந்தைகளுக்கு, மாநகராட்சி கமிஷனர் சதீஷ் குடற்புழு மாத்திரைகளை வழங்கினார். மாநகர நல அலுவலர் பார்த்தீபன், தாய் சேய் நல அலுவலர் சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.


இது குறித்து, கமிஷனர் சதீஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: தேசிய குடற்புழு நீக்கும் வாரத்தை முன்னிட்டு, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (நேற்று) முதல் செப்.,26 வரை, ஒரு வயது முதல், 19 வயது வரையுள்ள, 3 லட்சத்து, 20 ஆயிரம் குழந்தைகள், மாணவ, மாணவியருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும். இதில், ஒரு வயது முதல், இரண்டு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, அரை மாத்திரை, (200 மில்லி கிராம்), இரண்டு வயது முதல், 19 வயது வரையுள்ள மாணவ, மாணவியருக்கு ஒரு மாத்திரை (400 மில்லி கிராம்), வழங்கப்படும். சேலம் மாநகரில் உள்ள, 314 அங்கன்வாடி மையங்கள், 16 ஆரம்ப சுகாதார மையங்கள் மூலம் வரும், 26 வரை மாத்திரைகள் வழங்கப்படும். இப்பணிகளில் டாக்டர்கள், நர்ஸ்கள், மருந்தாளுநர்கள் உள்பட, 457 பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். இந்த மாத்திரைகள் உட்கொள்வதால் ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகை, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பாதிப்புகளிலிருந்து, பாதுகாத்துக் கொள்ள முடியும். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X