பொது செய்தி

தமிழ்நாடு

பத்ரகாளியம்மன் கோவில் மூடல்

Added : செப் 15, 2020
Share
Advertisement

மேட்டூர்: மேச்சேரி, பத்ரகாளியம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை நாளில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வர். நேற்று, மேட்டூரில் சப்-கலெக்டர் சரவணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அறநிலையத்துறை உதவி ஆணையர் உமாதேவி, பத்ரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் அழகு லிங்கேஸ்வரி, மேச்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் ஜலேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், கொரோனா பரவலை தடுக்க வரும், 17ல் மகாளய அமாவாசையை முன்னிட்டு, அன்று ஒரு நாள் மட்டும், மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலை மூடவும், பக்தர்கள் வழிபாடு செய்ய தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X