பொது செய்தி

தமிழ்நாடு

போலி ஆவணம் மூலம் சொத்தை அபகரிக்க முயற்சி; சகோதரி மீது கர்ப்பிணி பெண் புகார்

Added : செப் 15, 2020
Share
Advertisement

சேலம்: சேலத்தில் போலி ஆவணம் தயாரித்து, தாயின் சொத்தை அபகரிக்க சகோதரி முயற்சிப்பதாக, கர்ப்பிணி பெண், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்தார்.


சேலம், செவ்வாய்ப்பேட்டை, நரசிம்மசெட்டி ரோட்டை சேர்ந்த வெங்கடேஸ்வரன், கலைவாணி தம்பதியரின் மகள்கள் ஷர்மிளா, 30, திவ்யா, 28. இதில், திவ்யா எட்டு ஆண்டுகளுக்கு முன், இளம்பிள்ளையை சேர்ந்த கோபி, 30, என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தால், பிரிந்து இருந்த திவ்யா, இரண்டு ஆண்டுகளுக்கு முன், குடும்பத்துடன் இணைந்து கொண்டார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், தந்தை வெங்கடேஸ்வரன் இறந்து விட்டார்.

இந்நிலையில், ஆறு மாத கர்ப்பிணியாக உள்ள திவ்யா, நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு விபரம்: என் தாய் கலைவாணி கடந்த, 5ல் இறந்து விட்ட நிலையில், நான் வந்து பார்த்த போது, இடது கை பெருவிரலில் கைரேகை வைக்கப்பட்டதற்கான, அடையாள மை காணப்பட்டது. அவரை சொத்துக்காக துன்புறுத்தி, கையெழுத்து பெற்று இறக்க செய்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. போலி ஆவணம் தயாரித்து, சொத்துக்கள் அபகரிக்க முயற்சிப்பது குறித்து, அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தேன். விசாரணையில், என் தாயாரின் கைரேகை பெற்ற ஆவணங்களை, ஒப்படைப்பதாக அக்கா ஷர்மிளா தெரிவித்தார். தற்போது ஆவணங்களை ஒப்படைக்க மறுப்பதோடு, நகை, பணத்தை தர மறுத்து மிரட்டுகிறார். உரிய விசாரணை நடத்தி சொத்துக்கள், நகை, பணத்தை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X