பொது செய்தி

தமிழ்நாடு

ஐந்து கோவில் நிலங்கள் குத்தகைக்கு ஏலம்

Added : செப் 15, 2020
Share
Advertisement

கெங்கவல்லி: புனல்வாசல் கிராமத்தில், ஐந்து கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், போலீஸ் பாதுகாப்புடன் ஏலம் விடப்பட்டது. கெங்கவல்லி அருகே, புனல்வாசல் கிராமத்தில், தான்தோன்றீஸ்வரர், வரதராஜ பெருமாள், துர்க்கை அம்மன், விநாயகர் மற்றும் நடராஜர் கோவில்கள் உள்ளன. இருவேறு சமுதாயத்தினர் இடையே ஏற்பட்ட பிரச்னையால், நான்கு ஆண்டுக்கு முன் கோவிலை பூட்டி, 'சீல்' வைத்தனர். கடந்த ஆக., 5ல், ஆத்தூர் ஆர்.டி.ஓ., துரை தலைமையில், இருதரப்பினர் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டது. ஆக., 8ல், ஆர்.டி.ஓ., முன்னிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பின், கோவில் திறக்கப்பட்டு, அனைத்து தரப்பு மக்களுக்கு வழிபட அனுமதிக்கப்பட்டனர். கோவில் சொத்துக்கள் ஏலம், நிர்வாகம் செய்யும் உரிமை, ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டது. வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவில் செயல் அலுவலர் சுரேஷ்குமார், இக்கோவில்களுக்கு தக்காராக நியமிக்கப்பட்டார். நேற்று, தக்கார் சுரேஷ்குமார், சரக ஆய்வாளர் யோகலட்சுமி முன்னிலையில், கெங்கவல்லி போலீசார் பாதுகாப்புடன், ஐந்து கோவில்களின் சொத்துக்களான, 20 ஏக்கர் நிலம், ஒரு லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X